நடிப்பை விட்டு நடிப்பின் நாயகன் ஏன் விலகணும்.. ரசிகர்கள் கோபம்.. டிரெண்டாகும் #VIKRAMPrideOfKWood
சென்னை: சியான் விக்ரம் சினிமாவை விட்டு விலகப் போவதாக வெளியான வதந்தி சியான் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் பெருமையாக விளங்கும் சியான் விக்ரம் ஏன் சார் சினிமாவை விட்டு விலகணும் என்று #VIKRAMPrideOfKWood என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உயிரை கொடுத்து நடிக்கும் விக்ரமை பாராட்டியும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
டிரெண்டாகும் கோபம்
துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி சியான் விக்ரம் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகப் போவதாக பரவிய தகவல் வைரலான நிலையில், விஷயம் அறிந்த சியான் ரசிகர்கள், கோபத்தின் உச்சிக்கே சென்று #VIKRAMPrideOfKWood என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் அந்த ஹாஷ்டேக்கிற்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
படம் பேசும்
சியான் விக்ரம் யாருன்னு தெரியாதவர்களுக்கு இந்த ஒரு படமே பதில் சொல்லும் என கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் ஸ்டைலில் விக்ரம் இதுவரை ஒவ்வொரு படங்களிலும் பல வித கெட்டப்புகள் போட்டும், தனது உடலையும் உயிரையும் வருத்திக் கொண்ட நடித்த புகைப்படங்களின் தொகுப்பை எடிட் செய்து போட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் வரட்டும்
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், இப்படியொரு வதந்தியை ஹேட்டர்கள் கிளப்பியுள்ளனர் என்றும், கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வரட்டும் தமிழ் சினிமாவை மிரட்டும் என விக்ரம் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
நூறு தடவை கூட
பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் சியான் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், தமிழ் சினிமாவில் அவருக்கான தனி அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. அந்த படத்தில் விக்ரம் நடிப்பை பார்த்துத் தான் பலரும் அவரது ரசிகர்களாக மாறியுள்ளனர். அந்த படத்தை நூறு தடவை கூட பார்த்துட்டே இருக்கலாம் என ரசிகை ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதை மறக்க முடியுமா
சேது, பிதாமகன், அந்நியன், ராவணன், ஐ என பல படங்களில் தனது அல்டிமேட்டான நடிப்புத் திறமையை விக்ரம் வெளிப்படுத்தி இருப்பார். தில், ஜெமினி, தூள், சாமி என கமர்ஷியல் படங்களில் தான் கிங் என நிரூபித்துக் காட்டியவர் விக்ரம். ஐ படத்திற்காக உடல் எடையை குறைத்து விக்ரம் நடித்ததை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











