அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் அவரது 62வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு முன்னதாக லீக்கானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை தங்கலான் படத்தின் இன்னொரு மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது.
கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு வெளியிட்டது போல தங்கலான் படக்குழுவினர் இந்த ஆண்டுக்கும் மேக்கிங் வீடியோவை மட்டுமே வெளியிடுகின்றனர். ஆனால், ரிலீஸ் தேதியை கூட இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஏன் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி படங்களின் வரிசையில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
சித்தா இயக்குநர்: சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தினால் பல வருடங்கள் கழித்து சித்தார்த்துக்கு வெற்றி கிடைத்தது. அதே சூட்டோடு சூடாக அதிதி ராவையும் நிச்சயம் செய்துக் கொண்டார். சித்தா படத்தின் வெற்றிக்கு காரணம் அந்த படத்தின் இயக்குநர் அருண் குமார் தான். அப்படியொரு கதையை சித்தார்த்துக்கு கொடுத்து நடிக்க வைத்து வெற்றியும் பெற்றார். சித்தார்த்துக்கே ஹிட் கொடுத்த இயக்குநர் சியான் விக்ரமுக்கும் ஹிட் கொடுப்பார் என நினைத்து உடனடியாக சியான் 62 படத்துக்கு அவரை லாக் செய்து விட்டனர்.
வீர தீர சூரன்: சியான் 62 படத்துக்கு வீர தீர சூரன் என தாறுமாறான தமிழ் தலைப்பை அருண் குமார் வைத்திருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் படத்தின் டைட்டில் வழக்கம் போல லீக் ஆகி விட்டது.
சூர்யா பட வாடை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் வாடை வருகிறதே என வீர தீர சூரன் டைட்டிலை சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சியான் விக்ரமுக்கு சரியாக பொருந்தும் தலைப்பு தான் இது என்றும் சித்தா படத்தைத் தொடர்ந்து அருண்குமார் சியான் விக்ரமை வைத்து தரமான சம்பவம் செய்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். தங்கலான், துருவ நட்சத்திரம் படங்கள் விரைவில் வெளியானால் சூர்யா ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகிவிடுவார்கள்.
மளிகை கடையிலும் துப்பாக்கி: மளிகை கடையில் சியான் விக்ரம் பொட்டலம் போட்டுக் கொண்டு இருக்கும் கடைக்காரராக இருக்கிறார். அவரை ஒரு கும்பல் போட்டுத் தள்ள ஆயுதங்களுடன் வருகின்றனர். கடைசியில் வேலை பார்த்துக் கொண்டே துப்பாக்கியை ரெடி செய்து கொல்ல வரும் ஆட்களில் ஒருத்தனை சுடவும் அனைவரும் தெறித்து ஓடும் காட்சியை தற்போது டைட்டில் அறிவிப்புடன் வெளியிட்டுள்ளனர். அந்த 52 ரூபாய் உடன் சோப்பு 10 சேர்த்து 62 அப்டேட் கொடுத்தது வேறலெவல். ஆனால், சித்தா பட இயக்குநரையும் துப்பாக்கி தூக்க வச்சிட்டாங்களே என நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











