Dhruva Natchathiram: தீபாவளி ரேஸில் இணையும் துருவ நட்சத்திரம்.. இந்த முறையாவது நடக்குமா?

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் ரசிகர்களை சோதித்துவரும் படம் துருவ நட்சத்திரம்.

விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் படம் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vikrams Dhruva Natchathiram enters the Diwali race?

தீபாவளி பந்தயத்தில் பங்கேற்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம்?: நடிகர் விக்ரம் தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்ரமிற்கு சேது படம் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அந்தப் படத்தில் தன்னுடைய இருவேறு கெட்டப்புகளால் ரசிகர்களை அதிர வைத்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கு இந்த அதிர்வுகள் அவரது அடுத்தடுத்தப் படங்கள்மூலம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவரது பொன்னியின் செல்வன் படம் மிகச்சிறப்பாக அமைந்தது.

இதனிடையே அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. படத்தில் இருவேறு கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்திற்கு முன்னதாக விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படம் துவங்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு படம் தூசித்தட்டப்பட்டு, மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. தொடர்ந்து இப்போது அப்போது என்று இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த செய்திகள் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தது.

அறிவிப்பின்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் மறந்தே போன நிலையில், கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் எஞ்சிய காட்சிகள் சூட் செய்து இயக்குநர் கௌதம் மேனன் முடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தீபாவளி பந்தயத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்த முறையாவது இது நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் படத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் மீண்டும் வெளியான பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. விக்ரம் மற்றும் ரிது வர்மா மட்டுமே அந்த காட்சிகளில் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் படத்தில் ஜான் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விக்ரம். படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அவர் காணப்படுகிறார். படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், இந்தப் படத்தில் சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் முதல்பாகம்தான் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X