Dhruva Natchathiram: விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷன்.. யூடியூபில் புதிய பாடல்!

சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இந்தப் படம் ட்ராப் ஆனது.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் தூசி தட்டப்பட்டு மீண்டும் சூட்டிங் எடுக்கப்பட்டது. தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Vikrams Dhruva natchathiram movie oru manam song released in Youtube without Aiswarya Rajesh portions

துருவ நட்சத்திரம் பட பாடலில் நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷன்கள்: நடிகர் விக்ரம் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் வட்டத்தை மிகப்பெரிய அளவில் வைத்துள்ளார். இவருடைய மகன் த்ருவ் விக்ரம் நடிக்க வந்துள்ள போதிலும் விக்ரமின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருந்தார் விக்ரம். அவரது உடல்மொழி படத்தில் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் பீரியட் படமாக தங்கலான உருவாகியுள்ளது. இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் விக்ரம். வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களில் அவர் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்.

இந்தப் படங்களுக்கிடையில் கடந்த 2017ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் படத்தின் டீசரும் கடந்த 2017ம் ஆண்டிலேயே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ட்ராப் ஆனது. ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட்டிற்காக நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.

Vikrams Dhruva natchathiram movie oru manam song released in Youtube without Aiswarya Rajesh portions

இதனிடையே தற்போது இந்தப் படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு சூட்டிங் முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரிசு வர்மா, பார்த்திபன், ராதிகா, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்திருந்த நிலையில், தற்போது அவரது காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் நீளம் உள்ளிட்ட காரணங்கள் இதற்கு கூறப்பட்டுள்ளன.

இதனிடையே, முன்னதாக விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்த ஒரு மனம் பாடல், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் இந்தப் பாடலில் இருந்து நீக்கப்பட்டு, புதிய காட்சிகளுடன் பாடல் யூடியூபில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் பாடல் படத்தில் இடம்பெறாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டு, பாடல் யூடியூபில் இணைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X