Vikram - விக்ரமுக்கே தெரியாமல் வெளியிடப்பட்டதா கர்ணா டீசர்?... இது என்ன புது குழப்பமா இருக்கு

சென்னை: Karna Teaser (கர்ணா டீசர்) நேற்று வெளியான கர்ணா டீசர் குறித்து பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

விக்ரம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முன்னணி நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றவர். ஆரம்பத்தில் ரொம்பவே போராட்டங்களை சந்தித்த விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனையடுத்து தொட்டதெல்லாம் ஹிட்டாக கமர்ஷியல் படம், கலை படம் என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்து தற்போதைய நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார்.

Vikrams Karna Teaser was out Yesterday

வெற்றிக்கு காத்திருக்கும் விக்ரம்: விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன.குறிப்பாக அவர் கோப்ரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். அதில் அவர் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

வெற்றிதான் ஆனாலும்: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் விக்ரமின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது. மன்னர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் அப்படியே பொருந்திப்போயிவிட்டார்; அதேபோல் ஐஸ்வர்யா ராயுடுனான காதல் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று வழக்கம்போல் அவருக்கு பாராட்டு கிடைத்தது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்தப் படத்தின் வெற்றியின் முழு பங்கும் விக்ரமுக்கு சென்று சேரவில்லை.

தங்கலான்: இப்படி வெற்றிக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரஞ்சித் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் கண்டிப்பாக விக்ரமுக்கான வெற்றி இந்தப் படத்தில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போயினர். கோலார் தங்க வயலில் தமிழர்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கர்ணா: சூழல் இப்படி இருக்க திடீரென நேற்று விக்ரம் நடித்த கர்ணா படத்தின் டீசர் வெளியானது. விமல் என்பவர் இயக்கும் அந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானதாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் படம் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் நின்றுவிட்டது.

அதுகுறித்த எந்த தகவலும் அடுத்ததாக வெளியாகவில்லை. இந்நிலையில் திடீரென டீசர் வெளியானதால் இப்படி ஒரு டீசர் வெளியானது விக்ரமுக்கு தெரியுமா?; படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறதா என பல கேள்விகளை ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X