மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி.. அதகளப்படுத்தும் தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரகளையா இருக்கே

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அருமையான கதைகளை எழுதிய இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மாதிரி ஒரு கதையை எழுதியிருக்கவே கூடாது. முகநூலில் நடக்கும் உரையாடல் போல் படம் நெடுக வாடை அடித்ததாக ஓபனாக பேசினர் ரசிகர்கள்.

Vikram Thangalaan Pa Ranjith

தங்கலான்: இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்க கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.இரஞ்சித்துடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

மேக்கிங் வீடியோ: ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தங்கலான் அமையும் என்பதை கடந்த வருடம் வெளியான அதன் மேக்கிங் வீடியோவும், ட்ரெய்லரும் உணர்த்தின. அதனைப் பார்த்த ரசிகர்கள் விக்ரம் சும்மாவே அசுரத்தனமாக உழைப்பார். இப்போது பா.இரஞ்சித்தோடு வேறு இணைந்திருக்கிறார். சொல்லவா வேண்டும். படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகி விக்ரமுக்கு இருக்கும் தோல்வி முகத்தை மாற்றும் என கமெண்ட்ஸ் செய்தனர்.

கதை என்ன?: கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல்தான் கதை என கூறப்படுகிறது. கேஜிஎஃப்பில் அவர்கள் இருந்தபோது எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை இரஞ்சித் ரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்: முதலில் இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதனையடுத்து சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

முதல் சிங்கிள்: இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் இன்று ரிலீஸாகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை பாடல் ரிலீஸானது. 'மினுக்கி மினுக்கி' என்று தொடங்கும் பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். உமாதேவி வரிகளை எழுத; சிந்தூரி விஷால் பாடியிருக்கிறார். சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்திருக்கிறார். இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் பாடல் வரவேற்பை பெற்று ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X