விக்ரமின் வீர தீர சூரன் பாக்ஸ் ஆஃபிஸ்.. நான்காவது நாள் வசூல் நிலவரம் என்ன?.. மாஸ்தான் போங்க

சென்னை: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸானது. சித்தா என்கிற மெகா ப்ளாக் பஸ்டரை கொடுத்த இயக்குநரின் இயக்கம் என்பதாலும், அவருடன் விக்ரம் முதன்முறையாக இணைந்திருக்கிறார் என்பதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். இந்நிலையில் படத்தின் நான்காவது நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் கடந்த பல வருடங்களாகவே ஒரு கமர்ஷியல் சக்சஸை கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். அவரும் ஏகப்பட்ட படங்களில் வித்தியாசமாக நடித்தாலும் அவரது ரசிகர்களுக்கேற்ற ஒரு மாஸ் படம் மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது. பா.இரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்திருந்த தங்கலான் படம்கூட அவரது நடிப்பு திறமையைத்தான் பறைசாற்றுவதாக இருந்ததே ஒழிய ரசிகர்களுக்கு தேவையான சரக்கு இல்லை என்கிற விமர்சனம் பலமாகவே எழுந்தது. இதனால் தனது ரூட்டை மாற்ற முடிவெடுத்தார் விக்ரம்.

அருண்குமாருடன் கூட்டணி: சூழல் இப்படி இருக்க அவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி அருண்குமாருடன் கூட்டணி அமைத்தார். அருண் இயக்கிய சித்தா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கமல் ஹாசன், மணிரத்னம் உள்ளிட்டோர் எல்லாம் பாராட்டியிருந்தார்கள். செலிபிரிட்டிகள் மட்டுமின்றி ரசிகர்க்ளும் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். எனவே அவருடன் விக்ரம் இணைந்திருந்தது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram s Veera Dheera Sooran Movie Fourth Day Box Office Report Details

வீர தீர சூரன்: இரண்டு பேரும் இணைந்த வீர தீர சூரன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் என பவர் ஃபெர்பார்மர்களும் இணைந்தார்கள். இதன் காரணமாக இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் இருந்தது. கண்டிப்பாக இப்படம் விக்ரம் பல வருடங்களாக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு கமர்ஷியல் சக்சஸை கொடுக்கும்; இதில் நிச்சயமாக விக்ரமின் ஆக்டிங்கும், மாஸும் வேற லெவலில் இருக்கும் என்று ஆவலோடு நம்பி வியாழ கிழமை தியேட்டருக்கு சென்றார்கள் ரசிகர்கள்.

ஆரம்பமே சிக்கல்: ஆனால் படத்துக்கு ஆரம்பமே சிக்கல் எழுந்தது. அதாவது தயாரிப்பு தரப்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்த தரப்பு நீதிமன்றம் சென்றுவிட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றமோ படத்தை ரிலீஸ் செய்ய தடை போட்டது. பிறகு ஒருவழியாக படத்துக்கு எழுந்திருந்த சிக்கல் அன்றைய தினமே முடிக்கப்பட்டு வியாழன் மாலை படம் ரிலீஸானது. இருப்பினும் சொன்ன நேரத்துக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லையே என்று படக்குழு நிறையவே வருந்தியது. இயக்குநரும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

கலவையான விமர்சனம்: எது எப்படியோ படம் ரிலீஸாகிவிட்டதே என்ற மகிழ்ச்சியில் மாலை காட்சிக்கு ரசிகர்கள் சென்றார்கள். விக்ரமின் ரசிகர்களை படம் திருப்திப்படுத்ததான் செய்திருக்கிறது. முக்கியமாக தில், தூள், சாமி என கமர்ஷியல் பாதையில் சென்ற வின்டேஜ் விக்ரமை மீண்டும் பார்த்துவிட்டோம் என்று சியான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் படத்துக்கு இன்னொரு தரப்பிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன.

வசூல் நிலவரம்: இப்படி கலவையான விமர்சனத்தை பெற்றுவரும் வீர தீர சூரன் வசூல் ரீதியாக ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது Sacnilk வலைதளம் மூலம் தெரியவருகிறது. அந்த வலைதளம் வீர தீர சூரன் படத்தின் வசூல் நிலவரம் குறித்து வெளியிட்டிருக்கிறது. அந்த வலைதளம் வெளியிட்டுள்ள தகவலில் படமானது முதல் நாளில் இந்திய அளவில் மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயும், இரண்டாவது, மூன்றாவது நாளில் முறையே 3.7 கோடி ரூபாய், 5.5 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.. இந்நிலையில் நான்காவது நாளான நேற்று 6.65 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் மொத்தம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்திருப்பதாகவும் Sacnilk வலைதளம் தெரிவித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X