சந்தோஷ்சிவன் இயக்குகிறார்.. இந்தியில் ரீமேக் ஆகிறது மாஸ்டர் இயக்குனரின் முதல் படம்.. இவர்தான் ஹீரோ!

By

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட இயக்குனரின் முதல் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் ஹீரோயின். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

மாஸ்டர் ரிலீஸ்

மாஸ்டர் ரிலீஸ்

இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒடிடியில் வெளியாக இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், படக்குழு மறுத்துள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

சந்தீப் கிஷன்

சந்தீப் கிஷன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாநகரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்து இருந்தனர். 2017-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கொரோனா பிரச்னை

கொரோனா பிரச்னை

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகுதான் அவர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானது. கைதி படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அஜய்தேவ்கன், கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார். கொரோனா பிரச்னை முடிந்த பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இவர் புலி, இருமுகன், சாமி ஸ்கொயர் படங்களை தயாரித்த மலையாளத் தயாரிப்பாளர். ஒரு ஹீரோவாக விக்ராந்த் மாசே நடிக்கிறார். சஞ்சய் மிஸ்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜனவரி 10 ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X