திரையுலகத்தில் மற்றுமொரு துயரம்.. வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் மறைவு
சென்னை: வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இன்று அதாவது மே28ஆம் தேதி இயற்கை எய்தினார். எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிசை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், உயிரிழந்தார். அவருக்கு வயது 49. நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மறைவுச் செய்தி அடுத்தடுத்து வருவதால் திரையுலகத்தினர் சோகழ்த்தில் உள்ளனர்.

Comments


Click it and Unblock the Notifications