மாநகரம் ஸ்ரீக்கு இருந்த ஆசை என்ன தெரியுமா?..செம பிளானோடுதான் இருந்திருக்காரு.. அந்த விஷயம் நடக்குமா?

சென்னை: மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீ அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக எலும்பும், தோலுமாக இருந்த அவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாக பலரும் கூறினார்கள். கடந்த சில நாட்களாகவே அவரைப் பற்றிய பேச்சுக்கள்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரை பற்றி புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீ. ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து புகழடைந்திருந்த அவருக்கு முதல் படமே வெள்ளித்திரையில் பெரிய வரவேற்பை கொடுத்தது. வரவேற்பு மட்டுமின்றி வெகு சிறப்பாக நடிக்கிறார் என்றும் பெயரை பெற்றார் அவர். இதன் காரணமாக கண்டிப்பாக அடுத்த தலைமுறை நடிகர்களில் ஸ்ரீ தவிர்க்க முடியாதவராக வருவார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்தார்கள்.

Vil Ambu Director Ramesh Subramaniam Talks about Maanagaram Sri

நன்றாகத்தான் சென்றது: அதற்கேற்றபடிதான் அவரது திரை பயணமும் இருந்தது. வழக்கு படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் நடித்தார். இரண்டாவது படமும் சிறந்த இயக்குநரின் இயக்கத்தில் நடித்ததன் காரணமாக அவரைப் பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

காணாமல் போன ஸ்ரீ: இதற்கிடையே நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் ஜொலித்த அவர் இரண்டு நாவல்களை எழுதினார். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். ரசிகர்களும் அவரை சுத்தமாக மறந்தே போனார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வீடியோக்கள், ஃபோட்டோக்களை பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த பலரும் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்கள். எலும்பும் தோலுமாக காட்சியளித்த அவர் சில ஆபாச செயல்களையும் செய்தார்.

ஸ்ரீயின் விளக்கம்: அவரது இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று பலரும் தேடிக்கொண்டிருந்த நிலைமையில் மீண்டும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இறுகப்பற்று, வில் அம்பு ஆகிய படங்களுக்காக Potential Pictures,நல்லுசாமி பிக்சர்ஸ், ஸ்டார் ஃபிலிம் லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்பளத்தை கொடுக்கவில்லை. நீண்ட நாட்களாக எனக்கு வராத சம்பளம் வந்துவிடும் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறேன்" என தெரிவித்திருந்தார். அவரது இந்தப் போஸ்ட்டை பார்த்த பலரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை விமர்சிக்க தொடங்கினார்கள். ஆனால் அதுகுறித்து விளக்கமளித்திருந்த பிரபு, 'நாங்கள் ஸ்ரீயை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

வில் அம்பு இயக்குநர்: இந்நிலையில் ஸ்ரீயை வைத்து வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "ஸ்ரீயை நான் ஆறு மாதங்களுக்கு முன்பு நேரில் பார்த்தேன். அப்போது நாம் சேர்ந்து படம் செய்யலாம் என்று கூறினேன். அதற்கு அவரோ நானே ஒரு கதை வைத்திருக்கிறேன். அதனை இயக்கி ஹீரோவாக நடிக்கவிருக்கிறேன் என்று சொன்னார். அப்போது இந்த அளவுக்கு அவர் உடல் மெலிந்து காணப்படவில்லை. நன்றாகத்தான் இருந்தார். ரொம்ப நல்லவர் அவர். இப்போ ஃபோன் செய்தால் எடுக்கவே மாட்டேங்கிறார். அவரை இந்த நிலைமையில் பார்ப்பதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X