Vimal: விமல் நடிக்கும் குலசாமி மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் வேற இருக்காரு!

சென்னை: 'விலங்கு' வெப்சீரிஸ் தந்த வெற்றியைத் தொடர்ந்து விமல் நடிக்கும் 'குலசாமி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதி உள்ளார். நடிகர் விமலுக்கு ஜோடியாக இந்த படத்தில் தாராள பிரபு படத்தில் நடித்த நடிகை தான்யா ஹோப் நடித்துள்ளார்.

Vilangu fame Vimal starrer Kulasami mostion poster out now

தீரன் அதிகாரம் ஒன்று படம் உருவாக முக்கிய காரணமான ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார். அதன் அட்டகாசமான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

களவாணி விமல்: விஜய்யின் கில்லி, குருவி, அஜித்தின் கிரீடம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் விமல் பசங்க படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து களவாணி படத்தில் ஓவியாவுடன் இணைந்து பக்கா கிராமத்து இளைஞராகவே நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார். ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் டாப்ல வருவான் என சரண்யா பொன்வண்ணன் பேசும் வசனமும் கஞ்சா கருப்புடன் விமல் செய்யும் பால்டாயில் காமெடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Vilangu fame Vimal starrer Kulasami mostion poster out now

வெற்றியும் தோல்வியும்: சர்குணம் இயக்கத்தில் வெளியான களவாணி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், மீண்டும் சர்குணம் இயக்கத்தில் வாகை சூடவா படத்தில் வாத்தியாராக நடித்திருந்தார் விமல். தனுஷின் வாத்தி படத்துக்கெல்லாம் முன்னோடியாக செங்கல் சூளையில் அடிமைகளாக வாழும் மக்களுக்கு எழுத்தறிவித்த இறைவனாக நடித்து அசத்தி இருந்த விமலுக்கு அதற்கு முன்பும் பின்புமாக பல தோல்விப் படங்களும் சில வெற்றிப் படங்களும் கிடைத்தன.

விலங்கு வெப்சீரிஸ் : கலகலப்பு, மஞ்சப்பை படங்களுக்கு பிறகு விமல் நடித்த பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. மீண்டும் சர்குணத்துடன் இணைந்து களவாணி 2 படமெல்லாம் பண்ணியும் வொர்க்கவுட் ஆகல, இந்நிலையில், விடுதலை வெப்சீரிஸ் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கடந்த ஆண்டு விமலுக்கு பெற்றுத் தந்தது. விலங்கு வெப்சீரிஸை தொடர்ந்து மீண்டும் விமல் நடிக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

குலசாமி : குட்டிப்புலி படத்தில் நடித்த சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஜான்கிட் நடிப்பில் உருவாகி உள்ள குலசாமி படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வசனங்களை எழுதி இருப்பது தான் மிகப்பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் தியேட்டரில் விமலின் குலசாமி படம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X