விலாசினி தாயாரை மிரட்டிய நடிகர் கைது

By Staff

நடிகை விலாசினியின் தாயாரிடம் கந்து வட்டி கறக்க முயன்ற துணை நடிகர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

காற்றுள்ள வரை என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் சுரேஷ். அவர் நடித்துதள்ள ஞாயிறு என்ற படம் விரைவில்வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் சிவலிங்கம் என்பவரின் மகன் தான் இந்த சுரேஷ்.

சிவலிங்கம் பைனான்ஸும் செய்து வருகிறார் .அவருக்குத் துணையாக சுரேஷும் இருந்து வருகிறார். பைனான்ஸ்மூலம் கிடைத்த பணத்தை வைத்துத்தான் காற்றுள்ள வரை படத்தை சிவலிங்கம் தயாரித்து தனது மகனைநடிகராக்கினார்.

சிவலிங்கம் கந்து வட்டி வசூலிப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு புகார் உண்டு. ஆனால் இப்போதுதான்போலீஸில் சிக்கியுள்ளார். நடிகை விலாசினியின் தாயார் ஜெயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு கரகாட்டக்காரிஎன்ற படத்தை தயாரித்தார். விலாசினியும், ரோஜாவும் இப்படத்தில் நடித்தனர்.

இப்படத்தைத் தயாரிப்பதற்காக சுரேஷிடம் ஜெயலட்சுமி ரூ. 7 லட்சம் பணத்தை கடனாக பெற்றார். இதற்காகவெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

இந்தப் படம் முடிவடைந்ததும் படத்தின் சாட்டிலைட் உரிமையை சுரேஷுக்கு கொடுத்துள்ளார் ஜெயலட்சுமி.அத்தோடு, தான் வாங்கிய ரூ. 7 லட்சம் பணத்தை வட்டியும், முதலுமாக ரூ. 13.37 லட்சமாக திருப்பிக்கொடுத்துள்ளார்.

பணத்தைக் கொடுத்த பின்னரும் கூட ஜெயலட்சுமி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த வெற்றுத்தாளை சுரேஷ்திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ. 30 லட்சம் பணம் தர வேண்டும் என்றுஜெயலட்சுமியை அவர் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அடிக்கடி சுரேஷ் தொல்லை கொடுக்கவே பொறுக்க முடியாமல் சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் சுரேஷைஅழைத்து விசாரித்தனர்.

அப்போது, தான் கந்துவட்டி கேட்டு மிரட்டியதை ஒத்துக் கொண்டார் சுரேஷ். அத்தோடு, தனது தந்தைக்கும்இதில் தொடர்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷை போலீஸார் கைது செய்தனர். சிவலிங்கம்தலைமறைவாகி விட்டார். அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X