வேற லெவல் லோகேஷ் நீங்க...நன்றி வீடியோ வெளியிட்ட வில்லேஜ் குக்கிங் சேனல்
சென்னை : விக்ரம் டீமுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்து வருகின்றன. இதில் லேட்டஸ்டாக விக்லேஜ் குக்கிங் யூட்யூப் சேனல் குழுவினர் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசானது. இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

ஸ்டன்ட் காட்சிகளில் குரூப் டான்சர்
விக்ரம் படத்தில் ஏராளமானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். குரூப் டான்சரான வசந்தி என்பவருக்கு இந்த படத்தில் டீனா என்ற ரா ஏஜன்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இவர் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கமலுக்கு இணையான ஸ்டன்ட் காட்சிகள் வைக்கப்பட்டு, ஹாலிவுட் ரேஞ்சில் அதிரடி காட்டி இருப்பார்.
Recommended Video

வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு வாய்ப்பு
இதே போல் பிரபல யூட்யூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்களையும் படத்தில் ஒரு சீனிலும் நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். படத்தில் கமல் தான் Ghost என்பதை அறிமுகம் செய்யும் சீனுக்கு முன், திருமணம் ஒன்றில் அசைவம் சமைப்பது போல் ஒரு சீன் வைத்திருப்பார். இந்த சீனில் வில்லேஜ் குக்கிங் சேனல்காரர்களை நடிக்க வைத்திருப்பார்கள்.

நன்றி தெரிவித்து வீடியோ
விக்ரம் படத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கிய கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், இதற்கு பிறகு நிறைய சினிமா வாய்ப்புக்கள் வரும். ஆனால் உங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நானாக தான் இருக்க வேண்டும் என லோகேஷ் கூறி இருந்தார். அதே போல் எங்களை அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி. இதுவரை மக்கள் எங்களை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் பதிவிடும் கமெண்டுகளை பார்த்து தான் தெரிந்து கொண்டிருந்தோம்.

லோகேஷ் தான் காரணம்
ஆனால் முதல் முறையாக மக்களின் ரியாக்ஷனை தியேட்டரில் பார்க்க வைத்து விட்டார் லோகேஷ். படத்தில் நாங்கள் என்ன டயலாக் பேசினோம் என்பதே கேட்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் சத்தமும், விசில் சத்தமும் இருந்தது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் யூட்யூப் சேனல் பற்றி அன்பாக விசாரித்து, சில ஐடியாக்கள் கொடுத்த விஜய் சேதுபதி அண்ணனுக்கு நன்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவிற்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











