தீவிரமாகும் கொரோனா தொற்று.. தொடரும் லாக்டவுன்.. திருமணத்தைத் தள்ளி வைத்த 'வேதாளம்' வில்லன்!

By

சென்னை: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், பிரபல வில்லன் நடிகர் தனது திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. இந்த உயிர்கொல்லி வைரஸ், ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியுள்ளது. உலகம் முழுவதும்இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 15,31,669-ஆக உயர்ந்துள்ளது. 5,09,447 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் பலர் தங்கள் திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளனர். திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளையும் தள்ளி வைத்துள்ளனர்.

நடிகை நிஹரிகா

நடிகை நிஹரிகா

சிலர் லாக்டவுனை பொருட்படுத்தாமல் திருமணங்களை நடத்தியுள்ளனர். மலையாள நடிகர்கள் சிலர் தங்கள் திருமணத்தை கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோதே, நடத்தினர். தெலுங்கு நடிகர்கள், நிகில் சித்தார்த்தா, நிதின் ஆகியோர் தங்கள் திருமணங்களை லாக்டவுனில் முடித்தனர். அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடிகர் ராணா தனது திருமணத்தை நடத்த இருக்கிறார். நடிகை நிஹரிகா திருமணம் டிசம்பரில் நடக்கிறது.

வில்லன் கபீர் சிங்

வில்லன் கபீர் சிங்

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் கபீர் சிங் என்கிற கபீர் துஹான் சிங், தனது திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளார். இவர், தமிழில் அஜீத்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் றெக்க, மெஹந்தி சர்க்கஸ், காஞ்சனா 3, சித்தார்த் நடிக்கும் அருவம் படங்களில் வில்லனாக நடித்தவர். ஹரியானாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.

பாடகி டோலி சிந்து

பாடகி டோலி சிந்து

தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் இவரும் இந்திப் பட பின்னணி பாடகி டோலி சிதுவும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்தது. இதை, கபீர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். லாக்டவுனால் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X