TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த ரஜினி பட வில்லன்

மும்பை: ரஜினி படத்தில் நடித்த வில்லன் நடிகர் தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1980கள், 90களில் பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் மகேஷ் ஆனந்த்(57). அமிதாப் பச்சன், சஞ்சய் தத், கோவிந்தா உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வீரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மகேஷ்.
பிரிவு
மகேஷ் ஆனந்த் கடந்த 2000ம் ஆண்டு நடிகை உஷா பசானி என்கிற நடிகையை திருமணம் செய்தார். ஆனால் 2002ம் ஆண்டிலேயே அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மகேஷ் மும்பை அந்தேரி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
மகேஷ்
மகேஷ் வீட்டில் வேலை செய்யும் பெண் சனிக்கிழமை காலை வந்து கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்த கதவை உடைத்து பார்த்தபோது மகேஷ் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். டிவி ஓடிக் கொண்டிருந்தது. அவரின் உடல் அருகே தட்டு, மது பாட்டில் இருந்தது.
மரணம்
மகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தனிமையின் கொடுமையில் வாடி இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உஷா
மகேஷின் முன்னாள் மனைவி உஷா ரஷ்யாவில் வசித்து வருகிறார். அவருக்கு மகேஷின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மகேஷ் செலவுக்கு பணம் இல்லாமல் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்த ரங்கீலா ராஜா படம் கடந்த மாதம் 18ம் தேதி ரிலீஸானது. பல ஆண்டுகள் கழித்து படத்தில் நடித்ததை அவர் மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.