திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ!

சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Ponnambalam மருத்துவமனையில் அனுமதி! காரணம்?

தமிழ் சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவர் பொன்னம்பலம். 1988ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அந்தப் படத்தில் பொன்னம்பலம் சிறைக் கைதியாக நடித்திருப்பார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த பொன்னம்பலத்தை அடுத்தடுத்து பயன்படுத்திக் கொண்டது தமிழ் சினிமா.

10 படங்களுக்கு மேல்

10 படங்களுக்கு மேல்

1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தார். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். அவர் பீக்கில் இருந்த சமயத்தில் ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் நடித்து வந்தார்.

நாட்டாமை..

நாட்டாமை..

மாநகர காவல், மைக்கெல் மதன காமராஜன், வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை, மாயி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. இதேபோல் முத்து படத்திலும் மிரள விட்டார் பொன்னம்பலம்.

கமலே சென்று அழைத்தார்

கமலே சென்று அழைத்தார்

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் பொன்னம்பலம் கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் பொன்னம்பலத்தை அழைத்து வந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

பொன்னம்பலத்தின் மீது நடிகர் கமல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தெரிந்தது. இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் திடீர் உடர் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள விஹெச்எஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரிக்கும் கமல்

விசாரிக்கும் கமல்

அவருடைய சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார். அதுமட்டுமன்றி, பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் நடிகர் கமலே ஏற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் தினமும் தொலைபேசி வாயிலாக பொன்னம்பலத்தைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

வைரலாகும் வீடியோ

பொன்னம்பலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X