twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரகுவரன வில்லனா மட்டுமில்ல.. அப்பாவா, அன்புள்ள கணவனா.. ஏன் ஹீரோவாவும் பார்த்துருக்கோம்!

    |

    சென்னை: மாணிக் பாட்ஷாவை பாம் போட்டு கொல்ல துடித்த மார்க் ஆண்டனி ரகுவரனின் 12வது நினைவு தினம்.

    தமிழ் சினிமா ஹீரோக்களை மட்டுமல்ல, அவர்களை ஹீரோக்களாக மாற்றிய வில்லன்களையும் கொண்டாடித் தான் வருகிறது.

    ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, வில்லன் நடிகராக மாஸ் காட்டிய ரகுவரன், அப்பா உள்ளிட்ட குணசித்ர வேடங்களில் நடித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவால் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி தனது 49வது வயதில் இயற்கை எய்தினார்.

    மார்க் ஆண்டனி

    மார்க் ஆண்டனி

    மிஸ்டர் பாரத், சிவா, ராஜா சின்ன ரோஜா, மனிதன், ஊர்க்காவலன், முத்து, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிகர் ரகுவரன் நடித்திருந்தாலும், என்றைக்குமே ரசிகர்களின் ஃபேவரைட் கதாபாத்திரம் பாட்ஷா படத்தில் வரும் மார்க் ஆண்டனி தான். அந்த ரோலுக்கு வேறு ஒரு நடிகரை நிச்சயம் ரீ-ப்ளேஸ் செய்யவே முடியாது.

    பாசமான அப்பா

    பாசமான அப்பா

    மாமனாருக்கு வில்லனாக நடித்து வந்த ரகுவரன், தான் இறப்பதற்கு முன்பாக மருமகன் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் பாசமான அப்பாவாக நடித்து, தனது ஒட்டுமொத்த வில்லன் இமேஜை எல்லாம் தூக்கிப் போட செய்தார். ரகுவரன் நினைவாகவே, வேலையில்லா பட்டதாரி படத்தில், தனது பெயரையே ரகுவரன் என தனுஷ் வைத்துக் கொண்டு நடித்தது எல்லாம் அவர் மீது கொண்ட பாசத்தின் உச்சம் தான்.

    விஜய்யுடன்

    விஜய்யுடன்

    தளபதி விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் ரகுவரன். 1996ம் ஆண்டு வெளியான செல்வா படத்தில் தொடங்கி, நேருக்கு நேர், லவ் டுடே, நிலாவே வா, கண்ணுக்குள் நிலவு, திருமலை, என்றென்றும் காதல், சச்சின் உள்ளிட்ட பல படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    ஹீரோ ரகுவரன்

    ஹீரோ ரகுவரன்

    1982ம் ஆண்டு மலையாளத்தில் வில்லனாக அறிமுகமான ரகுவரன், அதே ஆண்டு, தமிழில் வெளியான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு ஓடை நதியாகிறது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மைக்கேல் ராஜ், கூட்டு புழுக்கள், கவிதை பாட நேரமில்லை, அஞ்சலி, தொட்டாச்சிணுங்கி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

    English summary
    Raghuvaran 12th year death anniversary remembered today. He played villain in several movies, and also supporting role, hero in some movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X