வயசு வித்தியாசம்லாம் பிரச்னையா பாஸ்? காதலை ஒப்புக்கொண்ட வேதாளம் வில்லன்...யார் அந்த ஹீரோயின்?
மும்பை: பிரபல நடிகையை காதலித்து வருவதாக அஜித்தின் வேதாளம் பட வில்லன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல இந்தி நடிகர்கள், வில்லன்களாக நடித்து வருகின்றனர். அதில் ஒருவர் ராகுல் தேவ்.
இவர் இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

அஜித்தின் வேதாளம்
தமிழில், விஜயகாந்த் நடித்த நரசிம்மா, அர்ஜூனின் பரசுராம், ஜெயம் ரவியின் மழை, லாரன்ஸின் முனி, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, விக்ரமின் 10 எண்றதுக்குள்ள, அஜித்தின் வேதாளம் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவரது மனைவி ரினா. கடந்த 2009 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார்.

முக்தா கோட்சே
மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராகுல் தேவ், கடந்த சில வருடங்களாக இந்தி நடிகை முக்தா கோட்சேவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். முக்தா, தமிழில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமியின் காதலி ஷில்பாவாக நடித்திருந்தார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவரும் ராகுல் தேவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர்.

கண்டதும் காதல்
ஆனால், இருவரும் அதை பற்றி எதுவும் பேசவில்லை. ராகுல் தேவுக்கும் முக்தாவுக்குமான வயது வித்தியாசம் 14 வருடங்கள். இந்நிலையில் காதலை ஒப்புக் கொண்டுள்ள ராகுல் தேவ் கூறும்போது, எங்கள் காதல், மறைந்த என் மனைவியின் குடும்பத்துக்கும் தெரியும். கண்டதும் ஏற்பட்ட காதல் அல்ல, எங்களுடையது.

காதலில் விழுந்தோம்
ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்தித்தேன். பிறகு பேசிக்கொண்டோம். நட்பானோம். அடிக்கடி சந்தித்துக்கொண்ட பின் இருவருமே காதலில் விழுந்தோம். எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், காதலில் அது ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது ஒரு பிரச்னையாக இருக்காது' என்றார்.


Click it and Unblock the Notifications











