இவரும் இருக்காராம்.. பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் இணைந்துள்ளார்.
அமரர் கல்கியின் புனைவு நாவலான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படைப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் இணைப்பாக நடிகர் ரியாஸ் கானும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார்.

வில்லன் நடிகர்
1993ம் ஆண்டு தமிழில் வெளியான ஆத்மா படம் மூலம் தமிழில் ரியாஸ் கான் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் ரியாஸ் கான் நடித்துள்ளார். வின்னர், கஜினி, பாபா, பத்ரி என பல ஹிட் படங்களில் ரியாஸ் கான் நடித்துள்ளார். வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ள ரியாஸ், இறுதியாக 2018ம் ஆண்டு வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருந்தார்.

முதல்முறை
கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கும் மேலாக சினிமா உலகில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் முதல்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் இணைந்துள்ளார்.

கன்ஃபார்ம்
பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்து வருகிறார் என்ற தகவலை அவரது மனைவியும் நடிகையுமான உமா ரியாஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

என்ன ரோல்
தாய்லாந்தில் ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வரும் நிலையில், ரியாஸ் கானும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக இந்த படத்தில் கடம்பூர் இளவரசன் அல்லது எதிரிகள் படை தளபதி போன்ற வேடத்தில் தான் ரியாஸ் கான் நடித்து வருவார் என தெரிகிறது. ஜனவரி 7ம் தேதி வரை தாய்லாந்தில் ரியாஸ் கான் போர்ஷன் இடம்பெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











