குடும்பத்துடன் மதம் மாறிய வில்லன் நடிகர் சாய் தீனா.. தீயாக பரவும் புகைப்படம்.. என்ன திடீர்னு?
சென்னை: சினிமாவில் வில்லன் நடிகர்களாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அதிகமாக ஆன்மிக ஈடுபாடுகளுடன் இருப்பதை நம்பியார் காலத்தில் இருந்தே பார்த்து வருகிறோம்.
சபரி மலைக்கு பல முறை சென்று மகா குருவாகவே ஆனவர் நம்பியார் என்பது தெரியும். டேனியல் பாலாஜி கூட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வில்லனாக பல படங்களில் நடித்து மிரட்டி வந்த சாய் தீனா தனது குடும்பத்துடன் மதமாற்றம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தில் வில்லன் நிஜத்தில் ஹீரோ
நம்பியார் முதல் பாலிவுட் நடிகரான சோனு சூட் வரை சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடித்தாலும், நிஜத்தில் ஹீரோவாக ஏகப்பட்ட உதவிகள் செய்வது, ஆன்மிகத்தில் அதிக நாட்டத்துடன் இருப்பது என அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சாய் தீனாவும் இணைந்துள்ளார்.

சாய் தீனா
பாக்ஸராக இருந்த தீனா கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் வார்டனாக நடித்து அறிமுகமானார். புதுப்பேட்டை, தலைநகரம், எந்திரன், ஆரண்ய காண்டம், ராஜா ராணி, பர்மா, கொம்பன், இன்று நேற்று நாளை, கிருமி, வாலு, பூலோகம், ஜில் ஜங் ஜக், தெறி, மாநகரம், மெர்சல், வடசென்னை, பிகில், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி உள்ளார்.

விருச்சிககாந்துக்கு உதவி
வில்லனாக சினிமாவில் முரட்டுத்தனமாக நடித்தாலும் உள்ளத்தால் ரொம்பவே நல்ல மனசு படைத்தவர் தான் சாய் தீனா. கடந்த 2017ம் ஆண்டு காதல் படத்தில் நடித்த விருச்சிககாந்த் எனும் பல்லு பாபு வறுமையின் காரணமாக கோயில் வாசலில் பிச்சை எடுப்பதை பார்த்து அவருக்கு உதவி செய்து பிரபலமானார் சாய் தீனா.

கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில் பாலிவுட்டில் வில்லன் நடிகர் சோனு சூட் சூப்பர்மேனாகவே மாறி ஏகப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். அதே போல இங்கே தன்னால் முடிந்த அளவுக்கு 250 குடும்பங்களின் பசியை ஆற்றி இருந்தார் சாய் தீனா. இந்நிலையில், அவர் புத்த மதத்துக்கு மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்த மதம்
"வில்லன் நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார்." என அவரது புகைப்படத்துடன் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











