சென்னையில் பயங்கரம்.. மயக்கமருந்து கொடுத்து மாணவி பலாத்காரம்..மிரட்டல்.. பிரபல நடிகரின் மகன் கைது
சென்னை: மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வில்லன் நடிகரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
நடிகர் பாக்யராஜ் மற்றும் சுலோக்சனா நடிப்பில் வெளியான தூரல் நின்னு போச்சு படத்தில் நடித்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். இவர் கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உட்பட பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் சூர்ய பிரகாஷ். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் பேச்சாளராகவும் உள்ளார் சூர்ய பிரகாஷ்.

நடிகரின் மகன்
தேர்தலின் போது சூர்ய பிரகாஷின் பிரச்சாரங்களையும் காண முடியும். இவரது மகன் விஜய் ஹரீஷ். இவர் நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் விஜய் ஹரீஷ்க்கும் வண்ணாரப் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் இருந்துள்ளது.

மயக்க மருந்து கொடுத்து
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நடிகர் விஜய் ஹரீஷ், தனது காதலியான கல்லூரி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது காதலிக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த நடிகர் விஜய் ஹரீஷ் அதில் மயக்க மருந்தை கலந்துள்ளார். இது தெரியாமல் காதலன் கொடுத்த கூல் டிரிங்ஸை குடித்துள்ளார் மாணவி.

வீடியோ எடுத்து..
பின்னர் மயக்கமடைந்த மாணவியை நடிகர் விஜய் ஹரீஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அவர் வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய நடிகர் விஜய் ஹரீஷ், அடிக்கடி அவரை உறவுக்கு அழைத்துள்ளார்.

சிறையில் அடைப்பு
இந்த டார்ச்சரை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாத மாணவி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் கோவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், நடிகர் விஜய் ஹரீஷை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசார் விசாரணை
பிரபல வில்லன் நடிகரின் மகன் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த சம்பவமும், இதற்காக அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











