தயாரிப்பாளர் ஆன வில்லன் அருள்தாஸ்.. மதயானை கூட்டம் இயக்குனர் இயக்கத்தில் தினேஷ்.. மாடுபிடி வீரராம்

By

சென்னை: பிரபல வில்லன் நடிகர் அருள்தாஸ் தயாரிப்பாளர் ஆனார்.

எஸ்.டி.சபா இயக்கிய பதினாறு, அ, ஆ, இ ஈ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்தாஸ். பிறகு வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.

நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, தடையறத்தாக்க, நீர்ப்பறவை, சூது கவ்வும், சலீம், பாபநாசம், மருது, காலா உட்பட பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் அருள்தாஸ்.

நல்லுசாமி பிக்ஸர்ஸ்

நல்லுசாமி பிக்ஸர்ஸ்

இவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். வில் அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக இவரும் கார்த்திக் துரையும் இணைந்து படம் தயாரிக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் படத்துக்கு தேரும் போரும் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார்.

ஹீரோவாக தினேஷ்

ஹீரோவாக தினேஷ்

இவர், கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்த மதயானைக் கூட்டம் படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் மூலமாக தென் தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை அழுத்தமாகப் பதிவு செய்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்தப் படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர், அட்டக்கத்தி, குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர்.

 ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன்

மைனா, கும்கி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, எம்.சுகுமார் இதற்கும் கேமராவை கையாள்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இவர், ஒருநாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும், நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர். இப்போது ஒத்தைக்கு ஒத்த, பகத் பாசில் நடிக்கும் மலையாளப் படம் ஆகியவற்றுக்கு இசை அமைக்கிறார்.

கிராமத்துப் பதிவு

கிராமத்துப் பதிவு

ஏகாதசி பாடல்கள் எழுதியுள்ளார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் வாரம் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்குகிறது. படம் பற்றி அருள்தாஸிடம் கேட்டபோது, சிவகங்கை பின்னணியில் நடக்கும் அழுத்தமான கிராமத்துக் கதையாக இது இருக்கும். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. நானும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். தினேஷ் மாடுபிடி வீரராக நடிக்கிறார்' என்றார்.

More from Filmibeat

Read more about: dinesh தினேஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X