கொரோனா நிதியளித்த தல.. விஷயம் தெரிந்ததும் புகழ்ந்து தள்ளிய அஜித் பட நாயகி!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நாயகரான அஜித், கொரோனா நிவாரண நிதியாக 1.25 கோடி நிதியை தாராளமாக வாரி வழங்கிய செய்தி அறிந்த நடிகை கிரண் பாராட்டித் தள்ளியுள்ளார்.

Recommended Video

Breaking: Thala Ajith Massive donation for கொரோனா relief | FEFSI | Lock Down

தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகர்களும் கொடுக்காத அளவுக்கு 1.25 கோடி நிதியை தல அஜித் கொடுத்துள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், அள்ளிக் கொடுத்த அஜித்தை மனோ பாலா, மோகன் ஜி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

வில்லன் ஹீரோயின்

வில்லன் ஹீரோயின்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், மீனா, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான வில்லன் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருப்பார். ஜெமினி, வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிரணுக்கு என்றுமே மறக்க முடியாத படமாக வில்லன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயசிலும்

39 வயதாகி விட்ட நிலையிலும் நடிகை கிரண் இன்னமும் குட்டி டிரெஸ்களை அணிந்து கொண்டு படு செக்ஸியாக இந்த லாக் டவுனை கழித்து வரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தினமும் பதிவிட்டு, சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார். இந்த வயசிலும் இப்படி கிளாமரா இருக்கீங்களே எப்படி கிரண் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்துக்கு பாராட்டு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நடிகர்கள் நடிகையர்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயையும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயையும், சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயையும் நிதியளித்தார் அஜித் என்ற செய்தியை அறிந்ததும் அவரை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் கிரண்.

நல்ல மனிதர்

தல அஜித் தாராளமாக 1.25 கோடி ரூபாய் நிதி அளித்த நிலையில், #PerfectCitizenThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்தனர். அதனை பார்த்த நடிகை கிரண், ஆம், அவர் நல்ல மனிதர் என குறிப்பிட்டு, வில்லன் பட ஸ்டில்லையும் பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கிரண்.

அதனாலதான் அவரு தல

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை தாராளமாக செய்துள்ள நடிகர் அஜித்தை கிரண் புகழ்ந்துள்ள நிலையில், அதற்கு கீழே அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், "வரவேண்டிய நேரத்துல வருவாரு, தரவேண்டிய நேரத்துல தருவாரு, அதானல தான் அவரு தல" என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X