ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்கு வில்லனை அழைக்கலையாமே!
சென்னை: ஐ இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் வில்லன் சுரேஷ் கோபியை அழைக்கவில்லையாம்.
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் பட விழாவில் இத்தனை சொதப்பல்களா என்று தான் பேசுகிறார்கள்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு வில்லன் சுரேஷ் கோபியை வேறு அழைக்கவில்லையாம்.

சின்மயி
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சின்மயி விழாவுக்கு வராத தெலுங்கு நடிகர் ராணாவை வரவேற்றார். ராணா தான் விழாவில் கலந்து கொள்ள முடியாததை ஏற்கனவே சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் கோபி
பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி ஐ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரை ஷங்கர் விழாவுக்கு அழைக்கவில்லையாம்.

சொதப்பல்
சுரேஷ் கோபி அளித்த கால்ஷீட்டை ஷங்கர் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டாராம். அதனால் மீண்டும் டேட்ஸ் கேட்டபோது சுரேஷ் கோபி கண்டுகொள்ளவில்லையாம். இதனால் ஷங்கருக்கும், சுரேஷ் கோபிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாம். இந்த காரணத்தால் தான் ஷங்கர் சுரேஷ் கோபியை விழாவுக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிசி
சுரேஷ் கோபி வேறு படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விழாவுக்கு வரவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications