காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர் பாக்யாஞ்சலி தான்-வில்லன் நடிகர் வேலு

By Sudha

சென்னை: நடிகை பாக்யாஞ்சலி என்னைக் காதலிப்பது போல நடித்து பண மோசடி செய்துவிட்டார் என்று வில்லன் நடிகர் வேலு போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

'உன்னையே காதலிக்கிறேன்', 'நெல்லு' ஆகிய படங்களில் நடித்தவர் பாக்கியாஞ்சலி. மலையாள நடிகை. இவர் தன்னோடு வில்லன் வேடத்தில் நடித்த வேலு மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமிக்கு உத்தரவிட்டார்.

துணை கமிஷனர் லட்சுமி இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்டமாக இந்த வழக்கில் பாக்கியாஞ்சலியிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள். பாக்கியாஞ்சலி கொடுத்த புகார் மனுவில், வில்லன் நடிகர் வேலு தனக்கு செக்ஸ் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் நிலையத்தில் வந்து ஆஜராகுமாறு வேலுவை, போலீசார் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் வேலு போலீசில் ஆஜராகவில்லை. சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

முன்ஜாமீன் வாங்கிய கையோடு நேற்று பிற்பகல் 3 மணியளவில் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வேலு ஆஜரானார். துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில், அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பாக்கியாஞ்சலி கொடுத்துள்ள புகார் மனுக்கு விளக்கம் கேட்டு போலீசார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து வெளியே வந்த வேலு, தனது வக்கீல் லிங்கேஸ்வரன் முன்னிலையில் நிருபர்களிடம் கூறுகையில்,

"பாக்கியாஞ்சலி என்மீது கொடுத்த புகார் பொய். இந்த பிரச்சினையில் நீதிமன்றம் எனக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாக்கியாஞ்சலிதான் என்னை காதலிப்பதுபோல் நடித்து என்னிடம் ரூ.40 ஆயிரத்தை கடன் வாங்குவதுபோல் வாங்கி திருப்பிதராமல் ஏமாற்றிவிட்டார்.

பாக்கியாஞ்சலிதான் எனக்கு காதல் கடிதம் எழுதினார். எஸ்.எம்.எஸ். மூலம் காதல் தூதும் அனுப்பினார். அவர் எழுதிய காதல் கடிதத்தை கோர்ட்டில் ஒப்படைத்துள்ளேன். அதே காதல் கடிதம் இப்போது போலீசாரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது..." என்றார்.

பாக்யாஞ்சலிதான் தன்னைக் காதலித்ததாகவும், தான் அவரைக் காதலிக்கவில்லை என்றும் வேலு தெரிவித்தார்.

பாக்கியாஞ்சலி எழுதியதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் நகலையும் நடிகர் வேலு, நிருபர்களிடம் கொடுத்தார். அதில், "நான், உங்களோடு எந்நேரமும் இருக்க விரும்புகிறேன். உன்னை காதலிக்கிறேன் வேலு" என்று பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் மேலும் சில ஆதாரங்களையும் வெளியிடப் போவதாக வேலு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X