twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்க 'அதுக்கு' சரிப்பட்டு வரமாட்டீங்க சார்... பேஸ்புக்கில் அர்னால்டைக் கலாய்க்கும் வில்லன்!

    |

    சென்னை: ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் தமிழ்ப் பட ஆசைக் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் வில்லன் நடிகர் ராஜேந்திரன்.

    நான் கடவுள் படம் மூலம் மக்கள் மனதில் கொடூர வில்லன் என்ற இடத்தைப் பிடித்தவர் நடிகர் ராஜேந்திரன். ஆனால், தொடர்ந்து அத்தகைய கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்காமல், ராஜேந்திரன் அவ்வப்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் தலை காட்டி வருகிறார்.

    அதேபோல், தொடர்ந்து பேஸ்புக்கில் உலவி வருபவர்களில் ராஜேந்திரனும் குறிப்பிடத்தக்கவர். அந்தவகையில் பேஸ்புக்கில் அர்னால்டு குறித்தும் ராஜேந்திரன் நகைச்சுவையாக ஒரு பதிவு செய்துள்ளார்.

    சென்னையில் அர்னால்டு...

    சென்னையில் அர்னால்டு...

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ பட இசை வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தான் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

    6 பாட்டுக்கு ஆடணும்...

    6 பாட்டுக்கு ஆடணும்...

    இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் ராஜேந்திரன். அதில், ‘இங்க ஒரு மூவிக்கு 6 பாட்டுக்கு டான்ஸ் ஆடணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது சார்' எனத் தெரிவித்துள்ளார்.

    கேப்டன் படத்தில்...

    கேப்டன் படத்தில்...

    மேலும், ‘வேண்டுமானால் உங்களுக்கு கேப்டன் படத்தில் சான்ஸ் வாக்கித் தரலாம்' என அதில் அவர் அர்னால்டைக் கலாய்த்துள்ளார்.

    ஆட்டுக்குட்டியும், ராஜேந்திரனும்...

    ஆட்டுக்குட்டியும், ராஜேந்திரனும்...

    பலாப்பழம் போன்று வெளியே கரடு முரடாகவும், உள்ளே மென்மையாகவும் சிலர் இருப்பார்கள் என்பதற்கு ராஜேந்திரனைக் கூட உதாரணமாகக் கூறலாம். பார்ப்பவரை கலங்கடிக்கும் உடற்கட்டுடன் சிறு குழந்தை போல ஆட்டுக் குட்டியைக் கையில் பிடித்தபடி புரொபைல் பிக்சருடன் பேஸ்புக் பக்கத்தில் வரவேற்கிறார் ராஜேந்திரன்.

    சமூக அக்கறை...

    சமூக அக்கறை...

    திரைப் படத்தில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகத் தான் இருப்பார்கள் என நம்பும் பெரும்பான்மையான மக்கள் உள்ள நாட்டில், பேருந்தில் பெண்களை இடிப்பவர்களே உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா என்பது போன்ற சில சமூக அக்கறையுடன் கூடிய பதிவுகளையும் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

    English summary
    The Villan actor Nan kadavul Rajendran teased Hollywood actor for his desire to act in Tamil film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X