ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கும் சண்ட காரி தி பாஸ்

சென்னை: சண்டகாரி தி பாஸ் படத்தில் ஸ்ரேயா காமெடி ஆக்சனில் கலக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று இயக்குநர் ஆர்.மாதேஷ் தெரிவித்துள்ளார். இது, மலையாளத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் படமாகும்.

பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் அன்ட் மெட்ரோ நெட் மல்டி மீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க ஜெ.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு 'சண்டகாரி தி பாஸ்' என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.

Vimal acts with Shriya Saran in Sandakari The Boss film

இந்த படத்தில் கதாநாயகனாக விமல், கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னணி நடிக நடிகைகள் நடிக்கின்றனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான மகதீரா (மாவீரன்) படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த மதுர, பிரசாந்த் நடித்த சாக்லேட், விஜய்காந்த் நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்.மாதேஷ், இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு நடனம்-அபீப், இசையமைத்திருப்பது அம்ரீஷ், பாடல்கள் எழுதியது கபிலன் விவேக், படத்தொகுப்பு-தினேஷ், கலை இயக்குநர்-அய்யப்பன், சண்டைப்பயிற்சி-கனல் கண்ணன், மக்கள் தொடர்பு-ரியாஸ்.கே.அஹ்மத்.

முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாகும் சண்டகாரி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, கொச்சின், காரைக்குடி, கோவா போன்ற நகரங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது என்று இயக்குநர் ஆர்.மாதேஷ் தெரிவித்தார்.

இது, மலையாளத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் படம் ஆகும். இது கேரளாவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X