twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.ராஜன் மற்றும் பயில்வான் ரங்கநாதன்... யாராக இருந்தாலும் இந்த ஒன்றை ஃபாலோ பண்ணுங்க,விமல் பேட்டி

    |

    சென்னை: இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு என வசனம் பேசி பசங்க திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் விமலுக்கு, களவாணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இத்திரைப்படத்தில் ஓவியா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் தொடர்ச்சியாக தூங்காநகரம், எத்தன் மற்றும் நார்வே சினிமா திரைப்பட விழாவில் 7 விருதுகளை கைப்பற்றிய வாகைசூட வா படமும் நடிகர் விமலுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

    இந்நிலையில் 2022ம் ஆண்டு தனது திரைப்பயணம் குறித்து நடிகர் விமல், நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    சித்ராவுக்கு என்ன நடந்தது? தற்கொலைக்கு காரணம் என்ன? ஹேமந்த் பதில் சொல்லியே ஆகணும்.. தாயார் பேட்டி!சித்ராவுக்கு என்ன நடந்தது? தற்கொலைக்கு காரணம் என்ன? ஹேமந்த் பதில் சொல்லியே ஆகணும்.. தாயார் பேட்டி!

    விலங்கு வெப்சீரியசுக்கு நல்ல வரவேற்பு

    விலங்கு வெப்சீரியசுக்கு நல்ல வரவேற்பு

    கேள்வி: விலங்கு வெப்சீரியஸ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: 2022ம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. ஐந்து, ஆறு வருடங்களாக நிலவி வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. விலங்கு வெப்சீரியஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    நல்ல தொடக்கத்தை தந்த ஜனவரி

    நல்ல தொடக்கத்தை தந்த ஜனவரி

    கேள்வி: ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?

    பதில்: ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் தற்போது நம்புகிறேன். ஏனெனில் ஜோதிடர்கள் கூறும்போது, ஏழரை சனி நடைபெறுகிறது. டிசம்பர் மாதம் விலகி 2022ம் ஜனவரி முதல் நன்றாக இருக்கும் என்றாரகள். அதுபோல் எனக்கு பிரச்சனைகள் எல்லாம் விலகி ஜனவரி நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

    மஞ்சள் குடை

    மஞ்சள் குடை

    கேள்வி: மஞ்சள் குடை திரைப்படத்தின் மையக்கருத்து என்ன?

    பதில்: நான் படித்து முடித்து விட்டு இருக்கும்போது, சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதைப்போல் மஞ்சள் குடை திரைப்படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீடு வாங்க முற்படுகிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை தான் மஞ்சள் குடை திரைப்படத்தில் கூறியுள்ளோம் என்றார்.

    கேள்வி: மற்றமொழிப்படங்களில் எப்போது நடிப்பீர்கள்?

    பதில்: தற்போது விலங்கு வெப்சீரியஸ் நன்றாக வந்துள்ளது. அதனை தொடர்ந்து பல கதைகள் என்னை தேடி வருகின்றது. தற்போது 5 முதல் 6 படங்கள் வரை நடித்து கொண்டிருக்கிறேன். அந்தந்த படங்கள் தொடர்ந்து வெளியாகும். அதற்கு பிறகு மற்ற மொழிப்படங்களில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றார்.

    நாகரீகம் வேண்டும்

    கேள்வி: தமிழ்த்திரைப்படத்துறையில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது:

    பதில்: கே.ராஜன் தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுப்பதில் சந்தோஷம் தான். அதைப் போல் பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையினர் குறித்தும் பேசி வருகிறார். என்னை பொறுத்துவரை, யாராக இருந்தாலும் எதை கூறினாலும் தீர விசாரித்து கூறவேண்டும். எதற்காக இதை நான் சொல்கிரேன் என்றால் எதை கூறினாலும் நாகரீகமாக பேச வேண்டும் என்பது எனது கருத்து என்றார். நாகரீகமாக என்ற ஒன்றை ஃபாலோ செய்தால் போதுமானது.தீர விசாரித்து பேசுவது தான் எல்லோருக்கும் நல்லது. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/B7mZNrZPBJQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், நடிகர் விமல் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Vimal Advice to Producer K Rajan and Bayilvan Ranganthan Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X