Vimal VS Bayilvan : தயாரிப்பாளர் கிட்ட பணம் கேட்டீங்களா?விமலை வம்பு இழுத்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : குலசாமி ப்ரோமோஷனில் கலந்து கொள்ள தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்டீங்களா என்று விமலை கேள்வி கேட்டு வம்பு இழுத்தார் பயில்வான் ரங்கநாதன்.
குட்டிப்புலி சரவண சக்தி இயக்கி உள்ள திரைப்படம் குலசாமி இப்படத்தில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மகாலிங்கம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவி சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
அமீர் : குலசாமி படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய இயக்குநர் அமீர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே ப்ரமோசன் செய்கிறார்கள் ஏன் என்றால் இன்றைய சினிமாவிற்கு ப்ரோமோஷன் முக்கியம். ஆனால் இந்த விழாவிற்கு விமல் வராதது வருத்தம் அளிக்கிறது. கதையின் நாயகன் நாயகி இங்கு வந்திக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளானது.

தெய்வமச்சான் : இந்நிலையில், விமலின் மற்றொரு படமான தெய்வமச்சான் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டு இருந்தது. அதில், விலங்கிற்கு பிறகு நல்ல கதை உள்ள படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தெய்வமச்சான் திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாகும். அடுத்து வரும் மா. பொ.சி திரைப்படம் கொஞ்சம் சீரியசாக இருக்கும். இப்படி ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.
ப்ரொமோஷனுக்கு பணம் கேட்டீங்களா : அப்போது திடீரென பாய்ந்து வந்த பயில்வான் ரங்கநாதன் நீங்கள் லட்ச ரூபாய் பணம் கேட்டு அதனை தராததால் தான் ப்ரொமோஷனுக்கு வரவில்லை தயாரிப்பாளர் குற்றம்சாட்டி இருக்கிறாரா என்று கேள்வி கேட்டார். எதற்கு பதில் அளித்த விமல் இது மிகவும் தவறான தகவல் அப்படி கேட்டிருந்தால் லட்சம் இல்லை அதைவிட அதிகமாகவே கேட்டு இருப்பேன். அந்த பிரஸ் மீட் தேதியை இருப்பேன். நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னாடி தான் எனக்கே சொன்னார்கள் என்றார்.

வம்பு இழுத்த பயில்வான் : விமலின் பதிலில் திருப்தி அடையாத பயில்வான் ரங்கநாதன், குலசாமி இயக்குநர் ஏன் உங்களுக்கு சப்போட் பண்ணவில்லை என்று வம்பு இழுக்கும் வகையில் கேட்டார். அப்படி இல்லை, நான் தெய்வமச்சான் படத்தின் ப்ரோமோசனை முடித்துவிட்ட இங்கே வருவதற்குள் இங்கே நிகழ்ச்சி முடிந்து விட்டது. இது வேற படம் அது வேற படம், உங்களுக்கு படமே தெரியல என்று விமல் பதில் அளித்தார்.
ரிலீஸ் தள்ளிவைப்பு : மேலும், ரெண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கும்படி இரு தயாரிப்பாளரிடமும் பேசி இருந்தேன். இதில் குலசாமி படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து "குலசாமி"திரைப்படம் மே 5ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











