கமல் இல்லை விமல் தாங்க உண்மையான பிக் பாஸ்: ஏன் தெரியுமா?
Recommended Video

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் அல்ல மாறாக நடிகர் விமல் தான் உண்மையான பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் கோலிவுட்டில் பிசியாகி வருகிறார்கள். நமீதா வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளார்.
கணேஷ், ஆர்யா, ஹரிஷ் கல்யாண், ரைசா, பிந்து மாதவி, ஓவியா, ஆர்த்தி படங்களில் பிசியாகியுள்ளனர்.

விமல்
ஜூலி விமல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விமலுடன் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இதன் மூலம் ஜூலியின் சினிமா கனவு நிறைவேறியுள்ளது.

பிந்து மாதவி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, பிந்து மாதவி ஆகியோர் ஏற்கனவே விமல் ஜோடியாக நடித்துள்ளனர். ஓவியாவின் முதல் ஹீரோவே விமல் தான்.

கலகலப்பு
பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த அஞ்சலி கூட விமலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி.

நடிகைகள்
பிக் பாஸ் வீட்டில் இருந்த ஓவியா, பிந்து மாதவி, ஜூலி, விருந்தாளியாக வந்த அஞ்சலி ஆகியோர் விமல் ஜோடியாகிவிட்டனர். அப்படிப் பார்த்தால் விமல் தாங்க உண்மையான பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











