மீண்டும் இணையும் சூப்பர் கூட்டணி.. ரசிகர்கள் குஷி!

சென்னை : இயக்குனர் சற்குணம் மற்றும் நடிகர் விமல் ஏற்கனவே இரண்டு முறை திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கும் நிலையில் இப்போது மூன்றாவது முறையாக இணைய உள்ளனர்.

இவர்கள் முதல்முறையாக களவாணி திரைப்படத்தில் இணைந்த இவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்த நிலையில் அதைத்தொடர்ந்து களவாணி பாகம் 2ம் உருவானது.

இந்நிலையில் இப்பொழுது இந்த வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக திரைப்படம் ஒன்றில் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளது.

கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில்

கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில்

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக விமல் பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எண்ணற்ற திரைப்படங்களில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வந்து சென்ற விமல் இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பரிச்சயமான மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கில்லி

கில்லி

எதார்த்தமான பேச்சு எதார்த்தமான நடிப்பு என தான் நடிக்கும் திரைப்படங்களில் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் தனக்கென ஸ்டைலை உருவாக்கி கொண்ட விமல், கில்லி, கிரீடம், குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்த நிலையில் பசங்க இவருக்கு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

வசூலை அள்ளியது

வசூலை அள்ளியது

இதைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் உடன் இவர் முதன் முறையாக இணைந்து நடித்த களவாணி திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக அமைந்த நிலையில் இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

அதைத்தொடர்ந்து விமலுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் ஹிட்டாக 2019ஆம் ஆண்டு மீண்டும் களவாணி பாகம் 2 திரைப்படத்தின் மூலம் இவர்கள் இணைந்த நிலையில் இப்பொழுது மூன்றாம் முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பலரும் சற்றும் எதிர்பாராத நிலையில் தீபாவளி பரிசாக இந்த படக்குழு வெளியிட்டுள்ள திரைப்படத்தின் தலைப்பு "எங்க பாட்டன் சொத்து" சுருக்கமாக "இபிஎஸ்" என வைத்திருக்கின்ற நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியிட இப்படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை விமல் மற்றும் சற்குணம் இணைந்து பணியாற்றி வெற்றி கண்ட நிலையில் இப்பொழுது மூன்றாவதாக ஹிட் கொடுக்க இணைந்திருப்பது கோலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X