Oviya: என்னது ஓவியாவின் அண்ணனா விமல்? இது என்னங்க புதுசா இருக்கு? ஓபனாக பேசிய களவாணி கதாநாயகன்!

சென்னை: படத்தில் நடிக்கின்றாரோ இல்லையோ, ஓவியா குறித்த தகவல்கள் எதாவது இணையத்தில் வலம் வந்துவிடுகின்றது, அல்லது ஓவியா குறித்த சுவாரஸ்யமான விசயங்கள் செய்தி ஆகிவிடுகின்றது. அந்த வகையில்தான் தற்போது ஒரு தகவலை நடிகர் விமல் கூறியது ஓவியா குறித்து வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கறுப்பு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் களவாணி. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் நகைச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, படம் செம ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் விமல், ஓவியா உள்ளிட்ட நடிகர்கள் மக்களின் அபிமான நடிகர்களாக உருவெடுத்தார்கள். படம் கிராமத்துக் கதையை மைய்யப்படுத்தி இருந்ததால், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர்.

vimal kalavani oviya

படம் பிரமாண்டமான வெற்றி பெற்றதால், படத்தின் இரண்டாம் பாகத்தினையும் படக்குழு எடுத்தது. குறிப்பாக படத்தின் முதல் பாகத்தினை நாசர் தயாரித்தார். ஆனால், இரண்டாம் பாகத்தினை இயக்குநர் சற்குணமே எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், படத்தினை தயாரிக்கவும் செய்தார். படம் வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. முதல் பாகம் பெற்ற அளவுக்கான வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை.

ஓவியாவுக்கு அண்ணன்: முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர், படத்தின் கதாபாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டு இருந்தனர். அப்போது முதலில் ஓவியாவின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்தான் விமல். இது தொடர்பாக அவரே ஒரு இடத்தில் பேசியுள்ளார். அதாவது, " களவாணி படத்தில் முதலில் என்னை ஓவியாவின் அண்ணனாக நடிக்கத்தான் முடிவு செய்தார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் சாருக்கு நான் கதாநாயகனாக செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்து வந்தது.

பசங்க: நான் அந்த காலத்தில் பசங்க படத்திலும் நடித்துக் கொண்டு இருந்தேன். பசங்க படம் வெளியாவதற்கு முன்னாடி களவாணி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நஷீர் சாருக்கு பசங்க படத்தின் தயாரிப்பாளர் சசிக்குமார் என்னைப் பற்றி கூறினார். அதன் பின்னர்தான் நஷீர் சார் என்னை அழைத்து களவாணி படத்தின் கதநாயகனாக நடிங்க விமல் எனக் கூறினார்" என விமல் கூறியுள்ளார்.

கமெண்ட்: விமல் கூறியுள்ள இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. ஓவியாவுக்கு அண்ணான நடிக்க வேண்டியவரா விமல்? களவாணி படத்தில் ஓவியாவும் விமலும் சிறப்பாகவே நடித்திருப்பார்கள், இவர்கள் இருவரும்தான் சரியான கதாபாத்திரத் தேர்வு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X