»   »  வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள சிங்கம் விமல்

வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள சிங்கம் விமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விமல் - அஞ்சலி நடித்த மாப்ள சிங்கம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் விமலின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

புதுமுகம் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் 'மாப்பிள்ளை சிங்கம்.' 2014-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த படத்தில் அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள்.


Vimal's Maapla Singam in big trouble

பெரும் பிரச்சினையில் சிக்கியிருந்த அஞ்சலி, அந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு நடித்திருக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளார்.


இதனால் அஞ்சலிக்கும், வெகுநாட்கள் கழித்து மசாலா, காமெடி கலந்த மாஸ் படமாக இந்தப் படம் அமைந்திருப்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருக்கிறார்.


எல்லாவற்றிலும் இடி விழுந்த மாதிரி நேற்று இணையதளத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பிய 'மாப்பிள்ளை சிங்கம்' படத்தின் பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.


அந்தப் படம் சென்சார் போர்டுக்கு அனுப்பும் பிரதியில் இருக்கும் டைமர் எல்லாம் அப்படியே பதிவாகியிருக்கிறது.


இதற்கு முன் சரத்குமார் நடித்த ஜக்குபாய் படம் இதே போலத்தான் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்து சமீபத்தில் வெளியான சேதுபதி படமும் வெளியான அன்றே இணைய தளங்களிலும் ரிலீசானது.


கேரளாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ப்ரேமம் படத்தின் சென்சார் பிரதியும் இதே போல திருட்டு வீடியோவாக வெளியானது நினைவிருக்கலாம்.


'திருட்டு வீடியோ எப்படி வெளியாகிறது என்று திரைத்துறையில் உள்ள அத்தனைப் பேருக்கும் தெரியும். ஆனால் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்காமல் மவுனம் காப்பதால்தான் இன்று அந்தப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது,' என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.


மொத்தமாக அழிவதற்குள் ஏதாவது பண்ணுங்கப்பா!

English summary
Vimal's forthcoming new movie Maapla Singam has been leaked online and gave big shock to film industry.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil