»   »  மன்னர் வகையறா... விமல் தேறுவாரா.. மீண்டும் துணை நடிகராவாரா?

மன்னர் வகையறா... விமல் தேறுவாரா.. மீண்டும் துணை நடிகராவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

களவாணிக்குப் பிறகு விமல் தனி நாயகனாக நடித்த எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

சமீபத்தில் வந்த மாப்ள சிங்கமும் வாரிவிட, இனி கிராமத்துப் படங்களில் நடிக்க மாட்டேன் என தயாரிப்பாளர்களைத் திருப்பி அனுப்பினார்.

Vimal's Mannar Vagaiyara resumed

அதன் பிறகு இவரை வைத்துப் படமெடுக்க யாருமே ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே சமீபத்திய சினிமாக்காரர்களின் வழக்கப்படி, தானே சொந்தமாகத் தயாரித்து ஒரு படம் நடித்தார். இயக்கம் பூபதி பாண்டியன். படத்துக்குப் பெயர் மன்னர் வகையறா.

சொந்தப் படம் எடுத்த பிறகுதான் தயாரிப்பாளர்களின் கஷ்டம் என்னவென்று விமலுக்குப் புரிந்திருக்கிறது. ஒரு கோடி வரை செலவான பிறகு, போதுன்டா சாமி தயாரிப்பு என வெளியில் வந்துவிட்டாராம். விஷயம் கேள்விப்பட்டு, வேறு ஒருவர் இப்போது படத்தை தன் கையில் எடுத்துக் கொண்டாராம்.

விமல், கயல் ஆனந்தி, பிரபு, நாசர், சரண்யா பொன்வண்ணன, ரோபேர சங்கர், யோகி பாபு நடிக்கின்றனர். அதே பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

தேறுவாரா விமல் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more about: vimal, விமல்
English summary
Vimal's Mannar Vagaiyara shooting has resumed from Yesterday at one of the Southern districts of Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos