Vimala Raman: 42 வயதில் தாராள கவர்ச்சி.. போதுமா முடியல.. தெறித்து ஓடும் ஃபேன்ஸ்!
சென்னை: கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை விமலா ராமன். நடிகர் வினையை காதலித்தும் வரும், தற்போது instagram-யில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த நடிகை விமலா ராமன், சிட்னியில் உள்ள நியூஸ் சவுத் வேல் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்து இருக்கிறார். இவருக்கு சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் மாடலிங்கில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய பொய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சுமாராக ஓடிய போதும், விமலா ராமனுக்கு மலையாளத்தில் நல்ல எதிர்காலம் இருந்தது.

நடிகை விமலா ராமன்: நேரம், பிரணயாகலம், சூரியன், நஸ்ராணி, ரோமியோ, கல்லூரி குமரன் என அடுத்தடுத்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அப்போது தான் விமலா ராமனுக்கு சேரன் இயக்கிய ராமன் தேடிய சீதை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் விமலா ராமனுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் நடித்து வந்த, விமலா ராமன், நடிகர் வினய்யை காதலிப்பதாக அறிவித்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அவ்வப்போது, நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்

தாராள கவர்ச்சி: அந்த வகையில் தற்போது, இவர் நீச்சல் உடையில் கவர்ச்சியை தாராளமாக காட்டி இருக்கும் போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்/ இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் 42 வயதில் தாராள கவர்ச்சி தேவையா? என்றும் போதும்பா முடியலடா சாமி என்றும் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications











