பிரேசிலுடன் மோது விமலுடன் மோதாதே.. தனக்கு அடுத்து மகனை இறக்கிவிட்ட கேலக்ஸி ஸ்டார்

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் விமல் மொத்தமாகவே வித்தியாசமானவர், படங்களில் தனது கதாபாத்திரங்களுக்காக மெனக்கெடுவதில் சிறந்தவர் என அவரது பல படங்கள் கூறும், அப்படி இருக்கையில், அவரது பேட்டிகள் விமல் மீதான மொத்த பிம்பத்தையும் மாற்றிவிட்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்ஸ்டாகிராம் மூலம் இணையவாசிகள் மத்தியில் செஸ் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்தவர் என்றால் அது கூஃபிஜென் எனப்படும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருபவர் தான்.

கூஃபி ஜென் தனது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் உடன் செஸ் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதேபோல், பல இணையவாசிகள் மற்றும் முன் அறிமுகம் இல்லாதவர்களுடன் செஸ் விளையாடி, செஸ் விளையாட்டு மீதான ஆர்வத்தை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளார். இதனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நட்பு ஏற்பட்டு அவர்களுடனும் விளையாடியுள்ளார்.

Vimal s Chess Challenge Goes Viral as Son Joins goofy gen in Wholesome Match

இப்படி இருக்கையில் கூஃபி ஜென் உடன் நடிகர் விமல் செஸ் விளையாடி உள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கூஃபி ஜென். இருவரும் இறகு பந்து மைதானத்தில் அமர்ந்து கொண்டு செஸ் விளையாடி உள்ளனர். இந்த போட்டியிலும் கூஃபிஜென் வெற்றி பெற்றார். இந்த போட்டி நடந்து முடிந்து சில நாட்களுக்குப் பின்னர், விமல் போன் செய்து, கூஃபி ஜென்னை தனது மகனுடன் செஸ் விளையாடச் சொல்லி உள்ளார்.

இதனால் கூஃபி ஜென்னும் விமலின் மகனுடன் இணைந்து விளையாடி உள்ளார். அந்த போட்டியில் கூஃபி ஜென் 'செக்' அடித்த பின்னர், ராஜாவைத் தூக்கி, சம்மந்தமே இல்லாத இடத்தில் தூக்கி வைத்துள்ளார். இதையும் அந்த வீடியோவில் காட்டி உள்ளார் கூஃபி ஜென். போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செஸ் மாஸ்டர் ஆனந்த்தின் கையொப்பம் பெற்ற செஸ் போர்டை பரிசாக கொடுத்துள்ளார்.

Vimal s Chess Challenge Goes Viral as Son Joins goofy gen in Wholesome Match

இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் லைக்குகளையும் கமெண்ட்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இணைய வாசி ஒருவர், பிரேசிலுடன் மோது விமலுடன் மோதாதே என்று கேப்ஷனிட்டு பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X