”சாமியை கொன்னுட்டேன்”.. சர்ச்சையை கிளப்பும் வசனத்துடன் வெளியான விமலின் ‘சார்’ டீசர்!

சென்னை: 'கன்னி மாடம்' படத்தை இயக்கிய இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி உள்ள 'சார்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். விலங்கு வெப்சீரிஸ் கடைசியாக விமலுக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வில்லன் நடிகராக இருந்து வந்த போஸ் வெங்கட் இயக்குநராக மாறியுள்ள நிலையில், இப்படியொரு படத்தை இயக்கியுள்ளார்.

'மபொசி' என்கிற தலைப்பில் தான் முதலில் இந்த படம் உருவானது. ஆனால், கடைசி நேரத்தில் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படத்துக்கு 'சார்' என பெயரை மாற்றியுள்ளனர்.

Vimal Sir Bose Venkat Vetrimaaran

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தை தெலுங்கில் சார் என வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக விமல் நடித்துள்ள நிலையில், டீசர் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

சார் டீசர் வெளியானது: மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமான போஸ் வெங்கட் ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'கன்னி மாடம்' படத்தை இயக்கிய போஸ் வெங்கட் விமல், சாயா தேவி, கண்ணன், சிராஜ் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள சார் படத்தின் டீசர் தற்போது வெளியானது. வெற்றிமாறனின் கிராஸ்ரூட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

சாமியை கொன்னுட்டேன்: டீசரின் ஆரம்பத்திலேயே சாமியாடி ஒருவர் நடந்து வர குறுக்கே பள்ளி ஒன்று இருக்க இங்கே தடை ஏன் இருக்கு என்கிறார். அதன் பின்னர் அந்த ஊரில் இருக்கும் பள்ளியை இல்லாமல் செய்ய வேண்டும் என சிலர் சதி செய்கின்றனர். கடைசியில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் விமல் முதல் காட்சியில் சாமியாடி கையில் ஏந்தி வந்த தீப்பந்தத்தை தனது கையில் வைத்துக் கொண்டு "சாமியை கொன்னுட்டேன்" என வசனம் பேசுகிறார். இந்த வசனம் சர்ச்சையை கிளப்பும் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வந்த வசனம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சார் டீசரிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அன்னபூரணி படத்தையே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்க காரணமே இந்து கடவுளை அவமதித்து விட்டார்கள் என்று கிளம்பிய பிரச்சனை தான் காரணம். இந்நிலையில், இப்படியொரு வசனத்தை ஏன் டீசரில் படக்குழு வைத்துள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விமலுக்கு வெற்றியை தருமா?: களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை என விமல் நடித்த சில படங்கள் வெற்றிப் பெற்றன. அதன் பின்னர், அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. கடைசியாக விலங்கு வெப்சீரிஸ் வெற்றிப் பெற்றது. அதன் பின்னர் குலசாமி, தெய்வ மச்சான், துடிக்கும் கரங்கள் என கடந்த ஆண்டு நடித்த எந்தவொரு படமும் ஓடவில்லை. இந்நிலையில், சார் திரைப்படம் விமலுக்கு வெற்றியை கொடுக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X