புதுமுகங்கள் அறிமுகமாகும் வினா – விடை… கிராமத்தில் படபூஜை

By Mayura Akilan

திருபுவனம்: சுதிர் - ஐஸ்வர்யா அறிமுகமாகும் வினாவிடை

புதுமுகங்கள் அறிமுகமாகும் வினா விடை படபூஜை சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள அல்லி நகரத்தில் நடைபெற்றது.

அல்லிநகரம் கிராமத்தில் தண்டீஸ்வரர் அய்யனார் கோயில் உள்ளது. சுற்றுவட்டார கிராமமக்களுக்கு குல தெய்வமாக விளங்கும் இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இங்கு முதன் முறையாக வினா - விடை படத்திற்கு பூஜை போடப்பட்டது.

தயாரித்து நடிக்கும் சுதிர்

தயாரித்து நடிக்கும் சுதிர்

வினா விடை படத்தினை சுதிர் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். ஜார்ஜ் நெப்போலியன் என்பவர் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் இசையமைப்பாளராக முராள் என்பவர் அறிமுகமாகிறார்.

கிராமமும் நகரமும்

கிராமமும் நகரமும்

படத்தின் கதை கிராமம் மற்றும் நகரம் சார்ந்த படம் என்பதால் அல்லிநகரம் கிராமத்தை தேர்வு செய்துள்ளதாக இயக்குநர் ஜார்ஜ் நெப்போலியன் தெரிவித்தார்.

கிராமத்தில் பூஜை

கிராமத்தில் பூஜை

பெரும்பாலும் படப்பிடிப்பு பூஜை சென்னையில்தான் தொடங்குவது வழக்கம். ஆனால் இப்படத்தின் பட பூஜையை படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தொடங்க நினைத்து அதன்படி செய்துள்ளோம் என்றார் இயக்குநர் ஜார்ஜ்நெப்போலியன்

துணை நடிகருக்கு மரியாதை

துணை நடிகருக்கு மரியாதை

பட பூஜையில் படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சுதிர் கலந்து கொண்டார். முதல் முறையாக படத்தின் துணைநடிகரான திருச்சி பாலு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு

அடுத்த மாதம் படப்பிடிப்பு

முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்புவனம் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மாதம் தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X