44 வயது வில்லன் நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் 42 வயது சேரன் பட நடிகை.. எல்லாம் அதுக்குத்தானா?
சென்னை: ஹனுமான் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வினய் நடிகை விமலா ராமனை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் இணைந்து நடத்தியுள்ள கப்புல் போட்டோஷூட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உன்னாலே உன்னாலே ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வினய் சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஹிப் ஹாப் ஆதியின் வீரன் மற்றும் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஹனுமான் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விமலா ராமன் கவர்ச்சி கன்னியாக தனது 42வது வயதிலும் செம கூலாக வினய்யுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
விமலா ராமன்: சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விமலா ராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிராண்ட்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய நடிகையாக நடித்து வரும் விமலா ராமன் நடிகர் வினய்யுடன் இணைந்து லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வினய் - விமலா ராமன் காதல்: பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் டேட்டிங் செய்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இருவரும் இணைந்து நடத்திய கப்புல் போட்டோஷூட் வேறலெவலில் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் ஹேப்பி ஆக்கி உள்ளது.
செம ஜோடி: கோட் சூட்டில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி போல வினய் மாஸ் காட்டுகிறார். அவருக்கு ஜோடியாக விமலா ராமன் அவருடன் கொஞ்சி ரொமான்ஸ் செய்து கட்டிப் பிடித்து, மேலே விழும் காட்சிகள் எல்லாம் வேறலெவலில் உள்ளன. ஆனால், இது ஒரு சீரிஸ் என பதிவிட்டுள்ளது தான் சற்றே குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக நடத்திய போட்டோஷூட் இல்லையா? இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமந்தா கமெண்ட்ஸ்: நடிகை சமந்தா இதை பார்த்து வரிசையாக பல கமெண்ட்டுகளை போட்டுள்ளார். ”சிலிப்பி, ஆவ்” என அவர் தனது எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தியுள்ளார். தேஜு அஸ்வினி உள்ளிட்ட நடிகைகளும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











