கணேசன்னா கரணம் போடு.. தல தளபதி படங்களில் கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி காட்சிகள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

விநாயகரை வணங்கினால் என்னென்ன நன்மை தெரியுமா? | Ganesh Chaturthi

கொரோனா காரணமாக எப்போதும் போல கொண்டாடும் அளவுக்கு விநாயகர் சதுர்த்தி களை கட்ட வில்லை என்றாலும், இந்து மதத்தினர் தங்கள் வீடுகளில் விநாயகரை வைத்து விக்கினங்கள் தீர வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விநாயகரை பற்றிய ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. விநாயகர் சதுர்த்தி காட்சிகள் இடம்பெற்ற தல தளபதி படங்கள் குறித்து இங்கே காண்போம்.

மஹா கணபதி

மஹா கணபதி

தல அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்த சூப்பரான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். மேலும், "காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா" பாடல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாடலாகவே உருவாக்கப்பட்டு இருக்கும். நடிகர் அஜித் படங்களில், முருகன் மற்றும் விநாயகருக்கு எப்போதுமே முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரத்தேங்கா அட்ரா அட்ரா

சூரத்தேங்கா அட்ரா அட்ரா

இப்போது டிவியில் கில்லி படம் போட்டாலும், முதல் முறை பார்ப்பது போல ரசிகர்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு ஆல் டைம் ஃபேவரைட் படமாக அது உள்ளது. கில்லி படத்தின் முதல் பாடலான சூரத்தேங்கா அட்ரா அட்ரா தொடங்கி, இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என படம் நெடுக கணேசரின் அருள் நிறைந்திருக்கும்.

வீர விநாயகா

வீர விநாயகா

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில், அனிருத் இசையில் உருவான ஓப்பனிங் பாடலான "வீர விநாயகா வெற்றி விநாயகா" பாடல் எல்லாம் இன்று கூட பல இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாடலாக ஒலித்து வருவது தான் அந்த பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

வில்லு படத்திலும்

வில்லு படத்திலும்

பிரபுதேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியான வில்லு படத்திலும் விநாயகர் சதுர்த்தி காட்சிகள் சிறப்பாகவே இடம் பெற்று இருக்கும். "ஹே ராமா ராமா" எனும் ஓப்பனிங் பாடலில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும், பாடலின் கடைசியில், விநாயகர் சிலைக்குள் மறைந்து விஜய் தனது ரகசிய பிளானை நடத்துவதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். மேலும், சில தமிழ் படங்களிலும் விநாயகர் சதுர்த்தி காட்சிகளை தமிழ் திரை இயக்குநர்கள் வைத்து விநாயகனின் நல் அருளை பெற்றிருப்பார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X