Vinayagar chaturthi 2023: திரை பிரபலங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்!
சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீதிகள் தோறும் விநாயகர் உருவ கோலங்கள் போடப்பட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலையை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதலே ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வீட்டிலும் கொழுக்கட்டைகள், சுண்டல், வாழைப்பழங்கள், தேங்காய் போன்ற பொருட்களை வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளனர்.
மகன்களுடன் தனுஷ்: நடிகர் தனுஷ் தனது மகன் யாத்ரா மற்றும் லிங்காவுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது

செல்வராகவன்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தனது மனைவி கீதாஞ்சலியுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பாவனி ரெட்டி: பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பவானி ரெட்டி. இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட சமயத்தில் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை கூறி ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார். இவர் நடன கலைஞருமான அமீரை காதலித்து வருகிறார். நடிகை பவானி ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நல்கர் பிரியங்கா: சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் பிரியங்கா நல்கர் . கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட பிரியங்கா, குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் அறிமுகமானார்.இவர் தனது கணவருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளார்.

ஸ்ரீநிதி: விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











