Vinayakan - ரஜினி படத்தால் தனுஷ் படத்தை தவறவிட்ட விநாயகன்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Vinayakan (விநாயகன்) ரஜினி படத்தால் தனுஷ் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று விநாயகன் தெரிவித்திருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரஜினி. அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

Vinayakan said that he could not act in Dhanushs Captain Miller because he acted in Jailer

கம்பேக் கொடுத்த இருவர்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆக; ரஜினிகாந்த்தின் மாஸும், க்ளாஸும் ரசிகர்களை கவர படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர். படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

வர்மன்: இதற்கிடையே படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடப்பட்டன. அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம். தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விநாயகன் இதில் வில்லனாக நடித்திருந்தார். வர்மன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசி நடிப்பில் மிரட்டி எடுத்துவிட்டார். இதனால் ரொம்ப வருடங்கள் கழித்து தமிழில் நடித்த விநாயகனுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. மேலும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக விநாயகனுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதுகுறித்து விநாயகன் பேசுகையில், "ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக நான் 35 லட்சம் ரூபாய்தான் சம்பளமாக பெற்றேன் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதைவிட மூன்று மடங்கு அதிகமாகத்தான் சம்பளம் பெற்றேன்.

மிஸ்ஸான தனுஷ படம்: ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் என்னை மிகவும் நன்றாகவும், அன்பாகவும் படக்குழு நடத்தினார்கள். எனது கரியரிலேயே அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்த படம் என்றால் அது ஜெயிலர்தான். அதனால்தான் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது" என்றார். விநாயகன் அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X