twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பெங்களூர்க்காரர்தான் கபாலி ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியவர்!

    By Shankar
    |

    செப்டம்பர் 16-ம் தேதி வெளியானது ரஜினியின் கபாலி முதல் தோற்ற போஸ்டர். அடுத்து வந்த நாட்களில் ஊடகங்களை முழுசாக ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தின இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.

    இதுவரை எந்தப் படத்தின் முதல் போஸ்டர்களுக்கும் கிடைக்காத வரவேற்பு இது. இணையத்தில், சமூக வலைத் தளங்களிலிருந்த பலரது இணையப் பக்கங்களிலும் இந்த போஸ்டர்கள்தான் ப்ரொபைல் படங்களாக மாறின.

    Vinci Raj, the designer of Kabali shares his experience

    இந்த போஸ்டர்களை இத்தனை சிறப்பாக வடிவமைத்தவர் யார் என்று கேட்காதவர்கள் குறைவு.

    யார் அந்த டிசைனர்?

    அவர் பெயர் வின்சி ராஜ். ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகர். பெங்களூரில் டிசைனராகத் திகழும் இவர், பிரபல பிராண்டுகளின் விளம்பரங்களை டிசைன் செய்துள்ளார். பெங்களூரில் பரபரப்பேற்படுத்திய ட்ராபிக் போலீசாரின் 'டாக் தெம் டெட்' விழிப்புணர்வு போஸ்டர் டிசைன்கள் இவரது கைவண்ணம்தான்.

    Vinci Raj, the designer of Kabali shares his experience

    இவரது இன்னொரு விழிப்புணர்வு டிசைன் 'தி குட் ரோட்' ஸ்பைக் ஏசியா 2014-ல் தங்கப் பதக்கம் வென்றது.

    கபாலி போஸ்டர் டிசைன்களை உருவாக்கியது பற்றிக் கூறுகையில், "ரஞ்சித், சிவி குமார் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். திடீர் விபத்து காரணமாக நான் சமீப காலமாக படங்களில் பணியாற்றாமல் இருந்தேன். அப்போதுதான் கபாலி பட டிசைனர் வாய்ப்பை அளித்தார் ரஞ்சித்.

    ஆனால் அந்த இடைவெளியில் பல புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு அவற்றை கபாலி டிசைனில் காட்டினேன்.

    கபாலியில் இதுவரை ரஜினியின் இரு டிசைன்களை மட்டும் காட்டியுளேன். இரண்டுமே கதையோடு தொடர்புடையவை. ஒன்றில் ரஜினி சார் மிக கம்பீரமாக ஒரு சோபாவில் அமர்ந்திருப்பார். இரண்டாவது தனது பகையாளிகளை வீழ்த்தி விட்டு இமயமாய் எழுந்து நிற்பார் ரஜினி.

    மொத்தம் பதினோரு போஸ்டர்கள் தயார் செய்தோம். முதல் போஸ்டர் தவிர, மீதி பத்து போஸ்டர்கள் கபாலி படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் தலைப்பு கூட கதையை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துகளில் ரஜினி உருவம், தொழிலாளிகளின் உருவம் இருப்பதுபோல டிசைன் செய்தேன். படத்தின் கதையை ஏற்கெனவே ரஞ்சித் எனக்கு சொல்லிவிட்டதால், இப்படி உருவாக்க முடிந்தது.

    Vinci Raj, the designer of Kabali shares his experience

    ரஜினி சார் மாதிரி எளிமையான, மிக சகஜமாக பழகக் கூடிய பெரும் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க முடியாது. படத்தின் மொத்த போட்டோ ஷூட்டும் இரண்டே நாட்களில் முடியக் காரணம் ரஜினி சாரின் வேகமும் அர்ப்பணிப்பும்தான். நான் முதல் முதலில் அவரைப் பார்த்ததும், 'சார், நான் உங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். நீங்க சிரிச்சா மட்டும் போதும்,' என்றேன். அவர் உடனே தனக்கே உரிய ஸ்டைல் புன்னகையுடன், 'அய்யோ... நோ ப்ராப்ளம் கண்ணா... லெட்ஸ் ஸ்டார்ட்' என்றார்.

    இந்த போட்டோஷூட்டுக்கு மலேசிய போட்டோகிராபர் ஸ்டீவ் கோ-வை பயன்படுத்தினேன்," என்றார்.

    கபாலிக்காக எடுக்கப்பட்ட மற்ற போட்டோக்களை விரைவில் அடுத்தடுத்து வெளியிடப் போகிறார்களாம்.

    English summary
    Vinci Raj, the Bangalore based designer who has designed Kabali first look posters has shared his experience with Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X