விஜய் கில்லியா? இல்லை சுள்ளியான்னு பார்க்கப்போறேன்.. விந்தியா என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: அரசியல்வாதியாக நடிகர் விஜய் அடியெடுத்து வைத்து முதல் மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், அனைத்து அரசியல்வாதிகளின் முகத்திரையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிவதாக நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் முதல் மாநாடு பல அரசியல் கட்சிகளின் தூக்கத்தை கெடுத்திருப்பது தான் இதற்கு காரணம் என்கின்றனர்.
நடிகர் விஜய்யின் தவெக கட்சியை கண்டுக் கொள்ளாமல் புதியவர்களும் போட்டிக்கு வரட்டுமே என்கிற மனப்பாங்கு எந்த கட்சிக்கும் இல்லை என்பது சீமான் முதல் விந்தியா வரை பேசுவதில் இருந்தே தெரிகிறது என்கின்றனர்.

குழந்தை போய் பாம்பை பிடிக்குதா என்றும் பேய்க் குழந்தை என்றும் திண்டுக்கல் லியோனி விஜய் பற்றி பேசிய நிலையில், விஜய் கில்லியா இல்லை சுள்ளியான்னு பார்க்கப் போறேன்னு முன்னாள் நடிகையும் அதிமுகவை சேர்ந்தவருமான விந்தியா பேசியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
மார்கழி திங்கள் அல்லவா: சங்கமம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மார்கழி திங்கள் அல்லவா என நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை விந்தியா. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், விவேக்குக்கு ஜோடியாக விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அரசியல் பக்கம் திரும்பி விட்டார். சினிமா நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விந்தியா விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்காமல் அதிமுகவுக்கு மாற்றாக விஜய் வருகிறார் என்றால் அது வேடிக்கை தான் என கிண்டல் செய்துள்ளார்.
கில்லியா? சுள்ளியா?: அரசியல் என்றால் சாதாரண விஷயம் என நினைத்து விட்டு பல பேர் கிளம்பி வந்துடுறாங்க. உலகநாயகன் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுன்னு எல்லாரும் பார்த்துருப்பாங்க. எம்ஜிஆர் மாதிரி எல்லாம் விஜய் ஆகமுடியாது. அரசியலுக்கு ரொம்பவே பொறுமை முக்கியம். உருவகேலி பண்ணுவாங்க, உடல்ரீதியான கிண்டலை சமாளிக்க வேண்டும், மன வலிமை வேண்டும். விஜய் பறந்து அடிக்கிற கில்லியா? இல்லை ஒடஞ்சு விழுகுற சுள்ளியான்னு பார்க்க காத்திருக்கிறேன் என விந்தியா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்பு: விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல கட்சிகளும் கடும் எதிர்ப்பை மட்டுமே தெரிவித்து வருகின்றன. விஜய்யின் வளர்ச்சியையும் அவரது கட்சியை பார்த்து மற்றவர்களுக்கு ஏற்படும் பயத்தையுமே அது காட்டுகிறது என்றே விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











