»   »  என்னை கடத்தவில்லை: விந்தியா

என்னை கடத்தவில்லை: விந்தியா

Subscribe to Oneindia Tamil

நடிகை விந்தியாவை சில நாட்களுக்கு முன் யாரோ கடத்தி சென்றுவிட்டதாக வதந்தி பரவியது.

விந்தியாவை யாரோ சிலர் கடத்திச்சென்று காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள ஒரு ஒட்டலில் அடைத்துவைத்திருப்பதாகவும், இது தொடர்பாக விந்தியாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார்அவரை தேடியதாகவும் செய்து பரவியது.

இதுகுறித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள விந்தியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான்கடத்தப்பட்டதை மறுத்தார்.

அவர் கூறுகையில், என்னை யாரும் கடத்தவில்லை. கடத்திச் செல்லும் அளவுக்கு எனக்கு எதிரிகளும் இல்லை.கடத்தப்பட்டதாக சொல்லப்படும் திங்கள்கிழமையன்று நான் எனது வீட்டில் தான் இருந்தேன்.

பகல் முழுவதும் சின்மயா நகரில் உள்ள எனது தயாரிப்பு அலுவலகத்தில் பணிகளை கவனித்தேன். அப்படிஇருந்தும் ஏன் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

நான் அமைதியாக இப்போது அழகு நிலையம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சொந்தப்படம் எடுக்கும்முயற்சியில் ஈடுபட்டுருக்கிறேன். இதனை கெடுக்கும் வகையில் யாரோ திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள்என்றார் விந்தியா சோகமாக.

Read more about: i was not kidnapped, says vindhya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil