நடிகை விந்தியா தந்தை மரணத்திற்கு ஜெயலலிதா இரங்கல்
சென்னை: அதிமுக தலைமைக் கழக பேச்சாளரும், நடிகையுமான விந்தியாவின் தந்தை யோகானந்த் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். எனவே அவரின் குடும்பத்தாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியாவினுடைய தந்தை வி.யோகானந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் நடிகை விந்தியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications