'காலா' சொன்ன தேதியில் களத்தில் குதிக்கவிருக்கும் இளம் நடிகர்!

By Vignesh Selvaraj

Recommended Video

காலா விளம்பர ஒப்பந்தங்கள் டீல் ஓவர்.

திருவனந்தபுரம் : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக அதே தேதியில் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது கேரளாவில் மலையாள படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். முக்கால்வாசி தியேட்டர்களை ரஜினி படத்திற்கே ஒதுக்கி விடுவார்கள். அந்தவகையில் இந்த வருடமும் ரஜினியின் 'காலா' படம் வெளிவரும் ஏப்ரல் 27-ம் தேதி வேறு படங்கள் வெளிவராது எனக் கருதப்பட்டது.

Vineeth sreenivasan releases his movie on kaala release date

தமிழ் திரையுலகில் நடைபெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக காலா சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம் தான். ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தாலும் கூட சென்சார் சான்றிதழ் பெற்ற சீனியாரிட்டி அடிப்படையில் 'காலா' ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றே கூறப்படுகிறது.

ரஜினியின் 'காலா' ரிலீஸ் தள்ளிப்போகும் என்பதையறிந்து, மலையாள திரையுலகில் சில படங்கள் ஏப்ரல் 27-ம் தேதியை ரிலீஸுக்காக தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டன. மலையாளத்தில் வினீத் ஶ்ரீனிவாசன் நடித்துள்ள 'அரவிந்தண்டே அதிதிகள்' படக்குழு ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அரவிந்தண்டே அதிதிதகள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நிகிலா விமல். தொடர் விடுமுறை என்பதாலும், பள்ளிகளில் கோடை விடுமுறை என்பதாலும் இன்னும் சில படங்களும் போட்டியில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி படத்தால் பின்வாங்கியிருந்த பலரும் படங்களை ரிலீஸ் செய்ய ஆயத்தமாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X