நாசாவில் வேலை பார்த்த பார்த்தியின் 'விஞ்ஞானி'!

By Mayura Akilan

நாசா விஞ்ஞானி தயாரித்து நடித்துள்ள சினிமாவான ‘விஞ்ஞானி' நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நடிகர்கள் படத்தில்தான் விஞ்ஞானியாக நடிப்பார்கள். ஆனால் ‘விஞ்ஞானி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பார்த்தி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை செய்தவர். தனது அனுபவத்தைக் கொண்டு விஞ்ஞானி திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கியும் உள்ளார் பார்த்தி.

ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதையில் நீண்ட நாட்களுக்கப் பின்னர் கதாநாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இவர்களோடு விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி, சஞ்சனா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கலை உலக கனவு

கலை உலக கனவு

அறிவியல் ஆய்வுத்துறையில் இருந்த பார்த்தி தனது நீண்டகால கனவான கலைத்துறைக்கு மாறியுள்ளார். விஞ்ஞானி தொடர்புடைய கதையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பார்த்தி தனது திரைப்படத்துக்கு விஞ்ஞானி என்று பெயர் சூட்டியுள்ளார்.

மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி

மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி

‘விஞ்ஞானி' திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்கிறார் இயக்குநர். நீண்ட நாட்களாக திரையில் காணாமல் போயிருந்த மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

விவேக் – தேவதர்ஷினி

விவேக் – தேவதர்ஷினி

நடிகர்கள் விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி போன்றோரும் இதில் நடித்துள்ளனர். நடிகை சஞ்சனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கிமாயா சினேகா இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் விவேக் - தேவதர்ஷினி காமெடி களைகட்ட உள்ளது.

தலைக்கனம் கொண்ட விஞ்ஞானி

தலைக்கனம் கொண்ட விஞ்ஞானி

மிகுந்த அறிவும் கொஞ்சம் தலைக்கனமும்கொண்ட ஒரு விஞ்ஞானி உலகின் முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு தேடி ஆராய்ச்சி செய்றான். அப்போ ஒரு தமிழ் ஆசிரியை அவனைத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஆராய்ச்சியில் குறுக்கிடுகிறாள். அதன் மூலம் நடக்கும் அதிசய அறிவியல் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்கிறார் பார்த்தி.

3000 ஆண்டுகளுக்கு முன்பு

3000 ஆண்டுகளுக்கு முன்பு

உலகின் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வா இருக்கிற 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் உயிரை மீண்டும் தமிழ் மண்ணில் மீள் உருவாக்கம் செய்கிறது இந்தப் படம்'' என்கிறார் பார்த்தி.

நவம்பர் 28ல் ரிலீஸ்

நவம்பர் 28ல் ரிலீஸ்

விஞ்ஞானி படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கமலநாதன் கவனிக்க, இயக்க மேற்பார்வை வித்யாதரன், எடிட்டிங் லெனின், மாருதி கவனிக்கிறார்கள்.. தயாரிப்பு மேற்பார்வை ஆனந்த பத்மநாபன் கவனிக்கிறார். மாரிஸ் விஜயின் இசையமைத்துள்ள விஞ்ஞானி திரைப்படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. நவம்பர் 28ஆம் தேதி விஞ்ஞானி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X