சிம்பு இல்லைனா அந்த மேஜிக் நடந்திருக்காது.. த்ரிஷா தான் வில்லன்.. மனம் திறந்த GVM!
சென்னை: இயக்குநர் கெளதம் இயக்கத்தில் சிம்பு நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருப்பினும் திரையரங்குகளில் இப்படத்தை திரையிட்டு கொண்டே இருக்கின்றனர். திரை ரசிகர்களுக்கு பிடித்த காதல் படங்களில் விண்ணை தாண்டி வருவாயா படமும் இடம்பிடிக்கும். இங்கே என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா... அதான் சார் எனக்கும் புரியலை.. என்ற வசனங்கள் பலரது ஹார்ட் டச்சிங் சொல்லாகவே இருந்து வருகிறது.
விண்ணை தாண்டி வருவாயா படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடுவதை காட்டிலும் படக்குழுவினரு தங்களது பங்கிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறப்பான நாளை கொடுத்த ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தை பார்க்கும்போது காதல் மட்டும் இல்லை, கவிதை கூட எழுதலாம், பாட்டு கூட பாட கத்துக்கலாம். காதலிக்காக வாழ்வதை காட்டிலும் வேறு என்ன சாதனை நிகழ்த்திவிட முடியும். சிம்பு ஸ்டைலில் சொல்லனும்னா காதலிக்காக உயிரை விடுற பையன்தான் அதிகம். காதல் யார் சொல்லியும் வருவதில்லை. அப்படியே நம்மளை போட்டு தாக்கனும் அந்த மாதிரி விண்ணை தாண்டி வருவாயா எல்லோர் மனதிலும் தேங்கி காதலாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கெளதம் மேனன்: விண்ணை தாண்டி வருவாயா படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கெளதம் மேனன் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது, "விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு வருகிறது. என்னை சந்திக்கும் பலரும் இன்னும் கார்த்திக், ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுப்படுத்துகின்றனர். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது.
வில்லன் நான் தான்: திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றிவிட்டது எனக் கூறி கெளதம் வாசுதேவ் நெகிழ்ச்சி அடைந்தார்.

சிலம்பரசன்: பின்னர் பேசிய சிலம்பரசன், விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார்.
த்ரிஷா: எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விண்ணைத் தாண்டி வருவாயா இருக்கிறது. என் மனதிற்கு நெருக்கமான படம். இதை படமாக எடுத்த கெளதம் வாசுதேவிற்கு நன்றி. இன்னும் பலரது அன்பினால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என த்ரிஷா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications