காதலர் தின ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்கள்.. அந்த படமும் லிஸ்டில் இருக்கு!

சென்னை : என் காதலே... என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்... காதல் பித்து தலைக்கு ஏறாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன. மனதுக்கு பிடித்தவர்களை உருகி உருகி காதலிப்பதே தனி சுகம் தானே.

அப்படிப்பட்ட காதலர்களுக்காக ஆண்டு தோறும் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பரிசு பொருட்கள், சிவப்பு ரோஜா, வாழ்த்து அட்டை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.

காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்காக நம் மனம் கவர்ந்த காதல் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

மனம் லயித்து, கண்ணோரம் நீரை கசிய வைத்து, இளமையின் அற்புதமான தருணங்களை காட்சிப்படுத்த திரைப்படங்களால் மட்டுமே முடியும். அப்படி, நம்மில் பலரை பாதித்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. காதலையும் காதல் வலியையும் உணர்த்திய திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இப்படம் தற்போதும் நம்மை போட்டு தாக்குது. ஜெஸ்ஸி ஐம் கிரேசி அபௌட் யூ என்று கவிதையாக படம் முழுக்க இருக்கும். காதலர்களின் பிடித்தப்படமான இந்த படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

மின்னலே

மின்னலே

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காதல் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அவற்றில் சில படங்கள் மட்டும் என்றென்றைக்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடிக்கும். அவை தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் அமைந்துவிடுவதுண்டு. அப்படிப்பட்ட காதல் பாடம் தான் 'மின்னலே'. இதில், மாதவன்,ரீமா சென், அப்பாஸ், நாகேஷ், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை காதலர்கள் கொண்டாடினார்கள்.

டைட்டானிக்

டைட்டானிக்

உண்மைச் சம்பவத்தை 1997 ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்பட டைட்டானிக் வெளியானது. இப்படத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜேக்-ரோஸின் காதல் காலங்கள் கடந்தும் இன்னும் பசுமையாக மனதை விட்டு மறையாமல் உள்ளது.

பிரேமம்

பிரேமம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாளத்தில் வெளியாகி சக்சைப்போடு போட்ட படம் தான் 'பிரேமம்'. நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மலையாளப் படமாக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் இப்படத்தை கல்லூரி மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பார்த்தனர். தமிழகத்தில் ரீ ரிலீஸ் ஆகும் முதல் மலையாளப்படம் பிரேமம் ஆகும்.

ஹிருதயம்

ஹிருதயம்

வினீத் சீனிவாசன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2022 வெளியான திரைப்படம் ஹிருதயம். இப்படத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேமம் படத்திற்கு பிறகு காதல் படமான இப்படமும் தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தது. 'ஹிருதயம்' திரைப்படமும் காதலர்களுக்காக காதலர் தினத்தில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே

ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.மென்மையான காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் 23 ஆண்டுகளாகியும் தற்போது இந்த படத்திற்கு என்று தனி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அனைத்துதரப்பு ரசிகர்களின் பேவரைட் படமான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: minnale மின்னலே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X